சத்தமிலா முத்தம்
நிதம் வருமோ யுத்தமிலா நித்தம்
இதம் தருமோ சத்தமிலா முத்தம் !
சுகம் தருமோ மங்கையின் சுவாசம்
ஆசுகம் வீசுமோ மலரின் வாசம் !
மேகம் வருடமோ மெல்ல விண்ணை
தேகம் தேடுமோ வெல்ல பெண்ணை !
வேகம் கூடுமோ உச்சத்தில் கெஞ்சி
தாகம் தனியுமோ மிச்சத்தில் எஞ்சி
நிதம் வருமோ யுத்தமிலா நித்தம்
இதம் தருமோ சத்தமிலா முத்தம்!