எனக்காக காத்திருக்கும் என்னவள்
ஒரு முல்லைக்கொடியே நடக்கிறதோ என்கண்முன்னே
கொடியிடையாள் அவள் நடந்து போகின்றாள்
அவள் கைகள் அசைந்திட வளையல்கள்
கிண்கிணி நாதம் மெல்ல எழுப்ப
சோலை கிளியோடு அவள் ஏதோ பேசி சிரித்தாள் மெல்ல
சிற்றாறின் சங்கீதமாய் அந்த சிரிப்பு இசைக்க
தவழ்ந்து வந்த மாலைத் தென்றலோடு பேசினாலோ
' தேன் தென்றலே இதோ இங்கே நான் காத்திருக்கிறேன்'
என்னவனைக் கண்டால் சொல்லி இங்கு அழைத்துவந்து
என்னோடு சேர்த்து வைப்பாயோ' என்பதுபோல் இருக்க
நொடிப்பொழுதில் தூது ஏந்திவந்த தென்றலும்
என்னை நெருட....இதோ என்னவளை பார்க்க போகின்றேன் நான்