பூம்பாவாய் - 281015 ஆனந்தவிகடன்

தோழர்களே, ஆனந்தவிகடனில் (28.10.15) வெளியாகியுள்ள "பூம்பாவாய்" என்ற எனது கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஆனந்த விகடனுக்கு நன்றி!
பூம்பாவாய்
பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.
அதன் அலங்கார உடை கண்டு
அறியாதார் அதிசயிப்பர்.
கொம்புகளின் கூர்மை
குத்திக் கிழிக்குமோ என்று
குழந்தைகள் அஞ்சும்.
பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்
செய்கிற வேலையை விட்டுவிட்டு
ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.
நான் அந்த மாட்டுக்கு
இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்
அவளிடம் கேட்டுக்கொண்டு!
நன்றி: ஆனந்த விகடன்