படித்த உங்கள் பாசத்திற்கு எல்லை இல்லை

வாடா மல்லிக்கு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ வாழ்வு இல்லை
தேடாதா நெஞ்சத்திற்கு தேசமில்லை
தேசத்தில் பலருக்கு நேசமில்லை

முள்ளம் பன்றிக்கோ கொம்பில்லை,
கொம்புள்ள மானுக்கோ வம்பு இல்லை
கானகத்து குயிலுக்குத் காட்சி (அழகு) இல்லை
மண்ணகத்து மயிலுக்கோ சூழ்ச்சி இல்லை

காற்றுக்கு நிழல் காட்ட உருவமில்லை
கதிரவனுக்கு காட்டுகின்ற நிழலில்லை
நீருக்கு நிறம் கொடுக்க நிறமில்லை
நெருப்புக்கு நெஞ்சத்தில் ஈரமில்லை

வறியவர் வாழ்க்கையில் வசதி இல்லை
வசதி படைத்தோர் வாழ்க்கையில் அமைதி இல்லை
இறைவனின் படைப்பினில் குறைவில்லை
குறை காண்பவர் வாழ்வினில் நிறைவு வில்லை

எவர் வாழ்வையும் இறைவன் குறைக்க வில்லை - இதை
அறிந்து வாழும் மனிதனுக்கு வானம் எல்லை
இதை படித்த உங்கள் பாசத்திற்கு எல்லை இல்லை ....

எழுதியவர் : மை சூ பாண்டியன் (9-Nov-15, 9:47 am)
பார்வை : 93

மேலே