காதலின் இறுதி ஆசை -முஹம்மத் ஸர்பான்

அழகே!!
உன்னோடு பேச
ஆசை கொள்கிறேன்.
ஆனால் நான் ஓர் ஊமை.

தேவதைகள்
என்ற பாடுபொருளில்
விழிகளால் கவி வரைய
நினைக்கிறேன்.
ஆனால் நான் ஒரு குருடன்.

குயில்களும் என்னை
கோபித்தது உன் தொனியை
கேட்க தவமிருந்ததால்...
ஆனால் காலத்தால் அவைகளும்
என்னை பார்த்து கேலியாய் சிரித்தது
நான் ஒரு செவிடன் என்று.....,

நீ இருக்கும் வாசல்
தேடி கண்டம் கண்டமாய்
செல்ல என்னால் முடியாது
நான் ஒரு முடவன்.

உன்னிடம் உதவி கேட்கிறேன்.
எனக்கு தாய் இல்லை எந்த
உறவும் சொந்தமில்லை என்றாலும்
அம்மா மடி என்று உன்னில் உறங்க
தவம் கிடக்கிறேன்.
உறவின் ஆனந்தம் என்று என் கண்களின்
வெள்ளம் உன் தேகம் பட பிண்டமாகியும்
கரையாமல் அடம் பிடித்துக்கொள்கிறேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-Nov-15, 10:39 pm)
பார்வை : 213

மேலே