மீண்டும் மீண்டும்

மீண்டும்...
மீண்டும்...
மனம் தேடுகிறது...

கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...

தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...

தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...

தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...

படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...

கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...

முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...

திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...

குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...

கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...

பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...

வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...

மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...


- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (13-Nov-15, 10:41 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 79

மேலே