குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் --- தரவு கொச்சகக் கலிப்பா
குழந்தைகளின் திருநாளாம் குதூகலத்தின் பெருநாளாம்
மழலைகளும் மனங்குளிரும் மாசற்ற நாளிதுவாம் .
அழகுடைய ரோஜாவின் அன்புடைய நேருமாமா
பழகுதற்குப் பண்பாளர் ; பாசமிக்க சான்றோராம் .
நேருமாமா பிறந்தநாளாம் ; நேசமிக்க நன்னாளாம் ;
பார்முழுதும் குழந்தைகளாம் ; பசுமையான நினைவுகளாம் .
ஊர்முழுதும் போற்றுகின்ற உணர்வான தினவிழாவாம் .
சீர்பெறவே குழந்தைகளும் சிரிக்கட்டும் எந்நாளும் .