விஞ்ஞானம்

நான்
எதை நோக்கி எழுத?
எங்கே செல்கிறதென் பாதை?

முற்றுப்புள்ளி என்றோ?
முட்டுக் கட்டைகள் எத்தனையோ?
புன்னகை எத்தனையோ?
அழுகுரலும் அத்தனையோ?

முற்றுப்புள்ளிக் கடந்தால்
முழு உண்மை விளங்குமோ?
யாதொன்றும் காணாமல்
மறுபயணம் தொடருமோ?

சொர்க்கமோ?நரகமோ?
காண இயலுமோ?
இப்பிறவி செயலெல்லாம்
பயனற்று போகுமோ?

விடை காண முயல்கையில்
நான் காணும் இருள் கலையுமோ?
கொஞ்சமேனும் வெளிச்சமாவது
எட்டித்தான் பார்க்குமோ?

கடவுள் என்ற ஒன்று
என் கண் காண முடியுமோ?
உடலற்ற உயிர் மட்டும்
மிஞ்சித்தான் நிற்குமோ?

வானம் தாண்டி போகுமோ?
பூமித் தோண்டி வாழுமோ?
நீரில் கரையுமோ?
நீராவி ஆகுமோ?

அளவற்ற மர்மத்தில்
அணுவாக வாழும்
நான்.......


இதில் எதை விஞ்ஞானம் என்பேன்?
அதில் எதை நோக்கி எழுதுவேன்?

எழுதியவர் : வாசுகி (13-Nov-15, 8:19 pm)
Tanglish : vignaanam
பார்வை : 66

மேலே