மாற்றத்தை எதிர்நோக்கு
சோக துக்கங்களில் மூழ்கித்திளைக்கும்
தருணத்தில்லெல்லாம்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
குழப்ப மனநிலை மனதில்
குடிகொல்லும்போதெல்லாம்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
தோல்விகள் தொடர்ந்துவந்து
தொட்டுக்கொண்டிருக்கும்போதெல்லாம்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
வெறுப்புகள் உன்னிலோளிந்துகொண்டு
உன்னை வதைத்தெடுத்தாலும்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
வலி வேதனை உன்னோடு
கைகோர்த்து வரும்போதிலும்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
விழிநீர் உண்கண்களின்
உருண்டோடுகயிலும்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
பாதித்த இயல்பு வாழ்க்கை
இயல்பாய் நகர்த்த,
மாற்றத்தை எதிர்நோக்கு...
வெற்றிக்கு வித்திட்டு
இன்பவாழ்வில் திளைப்பதற்காயும்,
மாற்றத்தை எதிர்நோக்கு...
மாற்றம் மட்டுமே மாறாதது
என்பதை மனதில் கொண்டு,
மாற்றத்தை எதிர்நோக்கு...
ஏற்றத்திற்கான மாற்றத்தை எதிர்நோக்கு...
மாற்றத்தை எதிர்நோக்கு...