வின் ஞானம் -போட்டிக் கவிதை -கார்த்திகா

ஒவ்வொரு முறையும்
தோல்வி கண்டு
வீழும்போது தாங்கும்
கரங்கள் உன்னுடையவையே

எறும்புகள் நூல் பிடித்து
நடக்கும் ஊர்வலத்தை
விட்டெறிந்த கற்கள்
சிதைப்பதில்லை ஒழுங்குபடுத்தி
கவனம் கூட்டுகின்றன

பாதைகள் தவறும் போது
அடிகள் சறுக்கினால்
தவறேதும் சொல்வதற்கில்லை
சரியானது இதுவல்லவே!

பொய்மை மெய்யாகித்
துளிர்க்கும் மடமைகளில்
சோர்ந்து போதல்
வெற்றிக்கு முன்னால்
விழுவதைப் போன்றது

தெளிவான இலக்கு
கலங்கரை போன்றது
ஆழியில் தத்தளிக்கும்
சுழல் வாழ்விற்கு..

வின் ஞானம் அறிந்தால்
நம் பிறப்பு சரித்திரத்தில்
வீழ்வதற்கல்ல!

எழுதியவர் : கார்த்திகா AK (14-Nov-15, 1:27 am)
பார்வை : 94

மேலே