நம்பிக்கை
நம்பிக்கையில்தான் இங்கு நாலும் நகருது
நம்பிப்பார்க்கையில் அந்த உண்மை புரியுது
மழையாய் வருவோம் என்றே நம்பியே
நீராவி வானம் செல்கிறது
உதிப்போம் என்று நம்பியே
சூரியன் மேற்கே மறையுது
நிற்போம் என்றே நம்பியே
எழுவாய் வீழ்ந்த தோழனே
நம்பிக்கைதான் வெற்றியின் சாவியே
அதை நம்பாமத்தான் நீ தோற்று போவதேன்
உதிர்வோம் என்றே தெரிந்துமே
தினமும் பூக்கும் பூவினமே
நம்பிக்கையின்றி வேறென்ன
நம்பித்தான் பார் மனமே
கரையைத்தொடவே அலையலைகள்
தொடர்ந்து முயலது நம்பிக்கையில்
நாமும் அதனை நகைக்கின்றோம்
சுனாமி வந்தால் நம்புகின்றோம்
உனக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னால்
உந்தன் உழைப்பு மட்டும் உண்டு
அந்த உழைப்பை நம்பி பாரு
நல்ல காலம் என்றும் உண்டு
காலையில் விழிப்போம் என்றே நம்பி இரவில் தூங்குகின்றோம்
நம்பிக்கைதான் வெற்றியின் சாவியே
அதை நம்பாமத்தான் நீ தோற்று போவதேன்
மனிதனவன் புதைத்தாலும்
விதைகளவை முளைத்திடுமே
நம்பிக்கை என்பது விதையல்லவா
தோல்விகள் அதற்கு உரம் அல்லவா
புறத்தினிலே கைகள் ரெண்டு
நம் அகத்தினிலும் கை ஒன்றுண்டு
அகத்தினுள் இருக்கும் கையென்ன
நம்பிக்கைதானே பொய்யல்ல
காதல் நட்பு கல்யாணமெல்லாம்
ஜெயிப்பதிங்கு நம்பிக்கையில்தான்
நம்பிக்கை என்றும் இருந்தால்
கல்லில் கூட கடவுளை காணலாம்
திரும்புவோம் என்றே நம்பி மனிதன் நிலவில் காலைவைத்தான்
நம்பிக்கைதான் வெற்றியின் சாவியே
அதை நம்பாமத்தான் நீ தோற்று போவதேன்