விஸ்வநாதன் சந்திரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : விஸ்வநாதன் சந்திரன் |
இடம் | : தேனி அல்லிநகரம் |
பிறந்த தேதி | : 11-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 11 |
பிரியாணியும் பீட்சாவும் சாப்பிட்டு விட்டு
பிளாஸ்டிக்கை பூமிக்கு கொடுக்கிறோம்.
கலர் கலராய் ஆடைகளை நெய்து விட்டு
கழிவுகளை ஆற்றில் கலக்கிறோம்.
காடுகளை வெட்டி கட்டடம் கட்டி விட்டு
கார் பார்கிங் செய்ய நிழல் தேடுகிறோம்.
இலவசமாய் கிடைத்த குளிர் காற்றைக் கூட
ஏசி வைத்து சூடேற்றி விட்டோம்.
இப்படிப்பட்ட இன்னல்களுக்கெல்லாம்
எங்கோ தன் எதிர்ப்பை உலகம் காட்டுகிறது.
உன்னிடத்தில் மழையில்லை என்பதால்
உலகத்திலே மழையில்லை என அர்த்தமில்லை.
எங்கோ ஒரு இடத்தில் இன்னமும்
மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த இயற்கையை வரவேற்கும்
வசதிகள் தான் உன்னிடத்தில் வரவில்லை.
மனிதனில்லாமல் மரங்கள்
மெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல!
கடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள! அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது!
நாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு!
இயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்!
இயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்!
சில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை! சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும்! ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்!
கடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ!
உன் நினைவு ஒவ்வொன்றும்
என் தாழிடப்பட்ட ஆழ்மனதில்
சுகமாய் உறங்கியபடி...
தலையணையில் முகம் புதைத்து
தழுவிக்கொள்கிறேன்
உன்னை முழுவதும்
கற்பனைக்கனவினில்...
சட்டென அணைத்தாலும்
உள்ளங்கள் ஒவ்வாது
உடல்கள் பிரிகின்றன
உயிரற்ற ஜடங்களாய்
ஊடலின் தாக்கம்
உள்வரை ஏக்கம்
நினைவுகள்
நாம் செதுக்கி வைத்த சிலைகளாய்
நிஜங்கள்
மனக்கண்காட்சியில் நிழல்களாய்.
நெருடல்கள்
நீ தீண்டிச்சென்ற வருடல்கள்
குமுறல்கள்
நான் விசும்பும் உளறல்கள்
ஆனால்...
உனக்கான என் நினைவெல்லாம்
பொத்தல் பொத்தலாய்
அழிக்க இயலாத கறையாய்
வலிக்க வலிக்க நீங்காத துயராய்
திரும்பத் திரும்ப ரீங்கரிக்க
ஒத
மகிழ்ச்சி ஒரு மந்திரச் சாவி...
புன்னகை தேசத்தின் அத்தனைப் பூட்டுகளையும்
மொத்தமாய்த் திறந்து விடும் ஒற்றைத் திறவுகோல்
பூட்டிய இதயங்களைப் புன்னகையால் திறந்து காட்டும்
மனிதர் கையில் இருந்தால் மழலைப் பள்ளியாக்கும்
வாடிய முகங்களையும் பௌர்ணமி நிலவாக்கும்
வானத்து முகில்களையும் புது வண்ண மயமாக்கும்
மங்கை மடியினிலும் மழலை மொழியினிலும்
கங்கை அலைகளிலும் கலைகள் அனைத்தினிலும்
நீக்கம் அற நிறைந்திருக்கும் – ஒன்றை
நின்று ரசித்தால் நிம்மதியாய்க் கரை சேர்க்கும்
கால் கடுக்க ஓடி வந்த காற்று
கடல் நீரில் களைப்பு நீங்கி களிக்கிறது
மெல்ல மெல்லக் கரையேறி மேகத்தை முத்தமிட
தன் மேனி சிலிர்த்து மேகம் க
மொழி வடிவம் :-
உயிரினங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவும் காரணிகளுள் மொழியும் ஒன்றாக விளங்குகிறது. மெய்க்குறிப்பு காட்டுதல், சித்திரம் வரைதல் போன்றவற்றை விட பேச்சும் எழுத்தும் எளிமையாக இருப்பதால் அவற்றிற்குப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்துக் கலையை விட பேச்சுக்கலை வடிவம் மக்களிடையே வேகமாக சென்றடைவதால் மக்களிடையே பேச்சிற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஒருவர் தனது எண்ணங்களை படம் வரைந்தோ அல்லது எழுதியோ தெரியப்படுத்த ஆகும் காலத்தை விட பேச்சு வடிவில் விரைவாகவும் எளிமையாகவும் பரிமாற்றம் செய்து விடலாம். எனவே தான் பேச்சு வடிவில் புழங்கப்பட
சாதனைச் சோறு
--------------------------------
எழுந்த சூரியன் வீழ்வதும்
வீழ்ந்த சூரியன் எழுவதும்
வாடிக்கையே..!
பூ சருகாகி விடுவதும்
சருகு உரமாகி வளர்வதும்
ஒரு வாழ்கையே..!
இறப்பும் பிறப்பும்
ஒரு வட்டத்தில் நிகழும்
நிகழ்வு..!
எரிவதெல்லாம் எரிமலையல்ல
பறப்பதெல்லாம் பட்டமல்ல
வீழ்ந்த நீயும்
யாரை விடவும் மட்டமல்ல..!
அதோ பார்..
காலுடைந்தப் பூனை...
புலியாய் பாய்வதை....!!
இதோ பார்
அடிவாங்கியப் புலி
அடுத்த வேட்டைக்கு
குறி வைத்திருக்கும் பாங்கை..!
பதறாதே தோழா..!
துவளாதே தோழா...!
உன்னில் எரியும் தோல்வியில்
பிரம்மாண்ட வெற்றி ஒன்று
சமைக்கப்படுகிறது.
கொஞ்சம் உன் தன்னம்ப
“சுந்தர பாண்டியன்” திரைப்படத்தில் வரும் “நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச...” எனத் தொடங்கும் பாடலின் மெட்டுக்குப் பொருந்துமாறு இப்பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. பாடல் வரிகள் பின்வருமாறு :-
பல்லவி
பொட்டப்புள்ள நெஞ்சுக்குள்ள எத்தனையோ ஆச!
அத்தனைக்கும் அர்த்தம் வந்து உள்ளங்கையில் பேச!
உறங்காத நாளுக்கெல்லாம் உசுரூட்ட வந்தானே!
ஊரெல்லாம் வாழ்த்துச் சொல்லும் உறவாக வந்தானே!
என் ரெட்ட ஜட சேத்து ஒரு ஒத்த ஜட போட
நல்ல நேரங்காலம் வந்துருச்சு இன்னும் என்ன ஜாட!
சரணம்
பத்து வித ஒத்துமையும் ஒத்துழைப்பு தந்துருச்சு
தங்கத் தாலி நீ முடிக்க தடையே இல்ல
வெத்தலையும் பாக்கும் போட்டு வெறுநா
விதிகளை மனிதன் படைத் திருந்தாலும்
விழிகளுக் குள்ளே கரையொன்றும் இல்லை.
சிந்தனைச் சிறகுகளை சிதற விட்டால்
சித்திரம் வரைகையில் கை நடுங்கும்
தேக்கம் என்பது தோல்விக்கு அறிகுறி
தேடுதல் என்பதே வெற்றியின் முதல்படி
நதியின் அழகு நகர்வதால் மிளிர்கிறது
வாழ்வின் அழகு தேடலில் புரிகிறது
வாழ்க்கையும் கூட நதியினைப் போல்தான்
கடக்கும் பொழுதே பயன் தெரியும்
நதியின் பயணம் எந்த கடலிலும் வென்று விடும்
வாழ்வின் பயணம் எந்த வழியிலும் சென்று விடும்
நன்மை – தீமை யாருக்கும் சொந்தமில்லை
அதனால் வாழ்வை வாழ்வதில் தொல்லை இல்லை.
என்றும் அன்புடன்,
VC
(விஸ்வநாதன் சந்திரன்)
ஜூன் 06, 2015