சாதனைச் சோறு ~ சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
சாதனைச் சோறு
--------------------------------
எழுந்த சூரியன் வீழ்வதும்
வீழ்ந்த சூரியன் எழுவதும்
வாடிக்கையே..!
பூ சருகாகி விடுவதும்
சருகு உரமாகி வளர்வதும்
ஒரு வாழ்கையே..!
இறப்பும் பிறப்பும்
ஒரு வட்டத்தில் நிகழும்
நிகழ்வு..!
எரிவதெல்லாம் எரிமலையல்ல
பறப்பதெல்லாம் பட்டமல்ல
வீழ்ந்த நீயும்
யாரை விடவும் மட்டமல்ல..!
அதோ பார்..
காலுடைந்தப் பூனை...
புலியாய் பாய்வதை....!!
இதோ பார்
அடிவாங்கியப் புலி
அடுத்த வேட்டைக்கு
குறி வைத்திருக்கும் பாங்கை..!
பதறாதே தோழா..!
துவளாதே தோழா...!
உன்னில் எரியும் தோல்வியில்
பிரம்மாண்ட வெற்றி ஒன்று
சமைக்கப்படுகிறது.
கொஞ்சம் உன் தன்னம்பிகையால்
இன்னும் கொஞ்சம் கிளறிவிடு....
நாளைய சாதனைச்சோறு
நிச்சயமிருக்கு உனக்கு...!
**
-இரா.சந்தோஷ் குமார்