என் தாய்க்கும் தந்தைக்கும் ஆயிரம் நன்றி
என்னினிய தோழியே! நான்சிறு பிள்ளையாய் இருந்தபோது
என்னிடம் லேப்டாப் இல்லை, பிளாக்பெரியும் இல்லையே,
ஐபாட், ஐபோன் என்றெதுவு மில்லை; நண்பருடன்
மெய்யாக நானும் தெருவில் விளையாடு வேனே! 1
முழங்கால் களில்,சிராய்த் துக்கொண்டும், கதைக ளனைத்தும்
களிப்புடன் பேசியும், கண்ணா மூச்சிவிளை யாடியும்
பொழுதை நாங்கள் கழிப்போம்; தாயார் தரும்எளிய
வழக்கமான உணவை சுவைத்து நான்சாப்பி டுவேனே! 2
பெற்றோர் சொல்லும் பேச்சைத் தட்டியும் 'முடியா(து)'
தென்று சொல்லவும் யோசிப்பேன் பலமுறை நானே!
எனக்காக, அம்மா, நீசெய்த தியாகங்கள் ஏராளம்!
உனக்காக நானும் செய்வேன் பலனாய் (உ)பகாரமே! 3
வாழ்க்கை அன்று அப்படி ஒன்றும் மோசமில்லை!
நன்றாக வேஇருந் தது,நான் பிழைத்துக் கொண்டேன்;
நா(ன்)இன்றி ருக்கும் நிலைக்கு என்னை உயர்த்திய
என்தாய்க்கும், தந்தைக்கும், பல்லா யிரநன்றி களுமே! 4