மிஸ்ரி
ஒரு குடும்பத்தில் இரட்டைக் குழந்தைகள்
பிறந்துள்ளன
முதலில் பிறந்தது ஆண் குழந்தை. அடுத்து
அரை மணி நேரம் கழித்து பெண் குழந்தை
பிறந்தது.
தற்காலத் தமிழர் வழக்கப்படி
குழந்தைகளுக்கு இந்திப் பெயர்
வைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து எழவில்லை. குழந்தைகளின்
தந்தையே குழந்தைகளுக்குப் பெயர்
வைக்க வேண்டும் என்று முடிவு
செய்யபடது.
அந்த ஊரில் எந்தக் குழந்தைக்கும்
வைக்கபடாத இந்திப் பெயராக இருக்க
வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
குழந்தைகளின் தந்தை குலேஸ்வர்
பட்டதாரி.
அன்று செய்தித்தாளில் 'மிஸ்ரா' என்று
முடியும் இந்திப் பேரை ஆண் குழந்தைக்கு
வைக்கலாம் என்று கூறினார்.
இந்தப் பெயரை குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் "ஸ்வீட் நேம்" என்று கூறி
ஏற்றுக் கொண்டனர்.
உடனே பாட்டி "ஏண்டா குலேசுவரா,
பெண் குழந்தைக்கு என்ன பேருடா" என்று
கேட்டார்.
"அது தான் பாட்டி தெரியாமல் முழிச்சு
இருக்கிறேன்" என்றான் பேரன்
"குலேஸ்வர்.
"இதில் முழிக்கிறதுக்கு என்னடா
இருக்குது. பையன் 'மிசுரா' (மிஸ்ரா)ன்னா
பொண்ணு 'மிசுரி'" (மிஸ்ரி) என்றார் பாட்டி.
"பாட்டி நீங்க பேரு வைக்கிறதில
பெரிய நிபுணர் பாட்டி. மிஸ்ரா , மிஸ்ரி.
ஆஹா ஸ்வீட் நேம்ஸ் பாட்டி" என்று
பாட்டியைப் பாராட்டினான் குலேஸ்வர்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
"மிஸ்ரா, மிஸ்ரி - ஸ்வீட் நேம்ஸ்" என்று
மூன்று தடவை கூறி தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.