இறப்பு என்பது உடலுக்கு மட்டும்தான்
ஒரு விதை விதைத்தால்
ஒரு மரமாகும்
ஒரு மரம் வளர்ந்தால்
எத்தனை விதைகளை விதைக்கும்
அந்த விதை ஒன்றுதான்
அப்துல்கலாம் ..,
தான் உயர்ந்தாலும்
தன் பிழைகளையும் உயர்த்துவது தான்
உண்மையான
ஒரு தந்தையின் கடமை
அந்த வகையில்
தேசத்தின் தந்தையாக
அப்துல்கலாம் ..,
வார்த்தைகள் வாசிக்கப்படும் போது
வசகமாகிறது
பேசும் வார்த்தைகளே வசகமானால்
அவன் ஒரு படைப்பாளி
அந்த படைப்பாளியாக
அப்துல்கலாம் ..,
புகழ் இமய மலையை அடைந்தாலும்
குணமாவது ஊற்று எடுத்த நீரைப்போல
மலையின் அடிவாரத்திர்க்கே
வந்து சேரும்
இந்த தங்கத்தின் குணமாக
அப்துல்கலாம் ..,
அவர் இந்த மண்ணை விட்டு
பிரிந்தாலும்
அவரது ஆன்மா
இந்த மண்ணில்தான் வாழும்
அதும் ஒவ்வொரு
இளைஞ்சனின் இதயத்தில்
என்றுமே துடித்திர்க்கும்...,
இவரை நினைகின்றவன்
நாட்டின் உயர்வில் பங்களிப்பான்
இவரை வணங்குபவன்
எவர்க்கும் தீங்கு செய்ய
ஒருபோதும் என்னாதவன்
இவரை மதிக்கின்றவன்
தாயை ஒருபோதும்
விதியில் விட மாட்டான் ..!!

