நட்பு

நட்பு என்பது
நான்கு பேர் ஒன்றாய் சுற்றுவதும்,
நடு இரவு வரை அரட்டை அடிப்பதும்,
நங்கையருக்கு மதிப்பெண் போடுவதும் அல்ல!

நல்ல நட்பு என்பது
தக்க தருணத்திற்கு ஏற்ப,
தாயாகவும் தந்தையாகவும்,
தோழனாகவும் சகோதரனாகவும்,
தூய அன்பை வெளிப்படுத்துவது!
சில தருணங்களில்
எதிரியாகவும் கூட!!!

அன்பு ஒன்றை மட்டுமே
அரியணையாய் கொண்ட நட்பே,
அகிலத்தின் தலை சிறந்த நட்பு!
அதுவே உண்மையான நட்பும் கூட!!!

எழுதியவர் : தமிழரசன் (13-Aug-15, 5:07 pm)
Tanglish : natpu
பார்வை : 535

மேலே