தெய்வ மகன்
இந்தியத் தென்கோடியிலொரு
ஏழைச் சிப்பியினில்
உருவான விஞ்ஞான முத்தொன்று
உழைப்பால் உயர்ந்து
நெற்றி தவழும் வெண்பட்டுக்
குழலோடும் ..
பவள மல்லிச்சிரிப்போடும்
இமயத்தையே மிஞ்சி
உலகே சலாம் செய்யும் "கலாம்"_ஆனது ...
தேசத்தை மணந்து கொண்ட
இந்த பிரமச்சர்ய தேவவிரதன்(பீஷ்மர்)
கனவுகளின் நம்பிக்கையை
கணைகளென தொடுத்தபோதெல்லாம்
"அக்னிச் சிறகு" முளைத்து
மாணவர்கள் மாற்றம் பெற்றனர். ..
வல்லரசுகளை வாய்பிளக்க வைத்த
இந்த இந்திய ஏவுகணை
திரும்பியே வரமுடியாத
தொலைவிற்க்கு விண்ணில்
பாய்ந்து விட்டதே. ...
இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்திற்கு
வழிகாட்டிய
விஞ்ஞான விளக்கொன்று
அணைந்து போனது ...
இந்தியா தனது
கல்விக் கலைமகளின்
விஞ்ஞான வீணையை
காலனிடம் காவு கொடுத்து விட்டு
கண்ணீரோடு நிற்கிறது. ..
இந்த பாரதத்திற்கு
பாடம் சொல்லித்தந்த
பல்கலைக்கழகம்
விதியின் மேடையில்
வீழ்ந்தது கண்டு
தேசமே கண்ணீர் வடிக்கிறது....
சாவு என்பது
தவிர்க்க முடியாதது தான்
ஆனால்
ஒரு சரித்திரத்தை
சரியச்செய்த சாவின்
எப்படி சாகடிக்க ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
