நேச உமிழுயிரி

புறத் திரள்களேதுமற்ற
அகத்திரள் நிறையுனது
ஆழ்தூண்டில் மாட்டுதலின்
தகவுறு தக்கைகள்
உள்ளிளுக்கையில்
புலப்படும்
வலி மண்டலங்களின்
அன்புச் சுழலில்
சிக்கித் தவிக்கிறதென்
இதயத்தின் தொண்டை...

பதிவுரிமமேதுமற்று
தன்னிச்சையாகவே
கற்பிதக் கோட்பாடுகளேதுமின்றி
உன்னை என்னில்
ஒரு பொருட்டுமின்றி
புரிபடாதவொரு
ஆதிமொழியின்
பாறைக்கல்வெட்டென
பதித்து செல்கிறாய். .

முகமைகளேதுமற்ற
உனது
செயல்பாடுகளின் வழி
செறிந்து பொழிகிற
பெருமழையாய்
மன வெளிவழியே
கசிந்து செல்கிற
உன் சிறுதுளிகளில்
என் சோகவடிநிலங்களின்
விரக்தி வண்டல்கள்
விளைந்து செழிக்கின்றன. ..

உனதக நிலைப்புத்திறனாய்வதில்
விஞ்ஞான மானிகளேதுமற்ற யெனது
மனப் பேழையின்
பகிர்ந்தளிக்கவியலா
குபேர ஆஸ்தி கர்வபங்கமழி
பொக்கிக்ஷப் பொற்புதையலே
ஜென்மமாயிரம் உனைக் காக்கும்
இப்பூதவுடலுறை யென்
நேச உமிழுயிரி நீ.

எழுதியவர் : பாலா (10-Jul-15, 8:01 pm)
பார்வை : 180

மேலே