காற்றில் கரைந்திடும் இராகம்
உன் பாத ஓசை கேட்கையிலே ...
எனை நோக்கி நீங்கள்(நீ) வருகையிலே...(என் மனதிற்கு சமிக்ஞை வந்துவிட்டது நீ எனை நோக்கி வருகிறாய் என்று!)
நான் நெஞ்சத்தை பிடித்துக் கொண்டு கீழே விழுகையிலே...
நீங்கள் கிளை முறிவதை போல்
சட்டென்று சரிந்து!
எனை மலர்போல் ஏந்துகையில் ...
என் மூச்சு ஆர்பரித்துக் கொண்டிருப்பதை பார்த்து
வலையில் சிக்கிய மீன் போல் துடிக்கின்றீர்...
என் கையை எடுத்து பிடித்து
ஆறுதல் வாய் உரைத்த
தருணம்
காட்டாற்று வெள்ளத்தை
அணை போட்டாயோ?
நான் கலங்கக்கூடாது என்று!
அணை உடைந்து
கண்ணீர் கசிகிறது
கண்ணின் ஓரத்தில் இருந்து
முத்து போல்
கண்ணீர் துளி
என் மேல் விழுகிறது!
என் மேல் விழுந்த முத்தை
துடைத்துவிட்டு !
நான் அறியக் கூடாது
என்பது போல்
உன் எழில் முகத்தை
திருப்பி கண்ணீரை
துடைத்துக் கொண்டாய்!
முத்து விழுந்த
நெற்றி பொட்டில்
முத்தமிட்டாய்!
என் உச்சிதனை முகர்ந்தாய்!
என் தலையை கோதினாய்!
எனை ஆரத்தழுவிக் கொண்டாய்!
தழுவிக் கொண்டிருக்கையில்
கேட்டேன் !
என் மீது இவ்வளவு
அன்பா(காதலா) உனக்கு ...
அப்படி இருந்தும் வெளியே
காட்டிக் கொள்ளவே
இல்லையே!
எனக்காக
நீ இருக்க....
நான் எங்கும்
செல்ல போவதில்லை!
உன் மார்போடு
நான் இருப்பேன்!
இவை அனைத்தும்
என் நடிப்பு
என் மேல்
நீங்கள்
வைத்திருக்கும்
அன்பை காணவே!
இவ்வாறு செய்தேன்!
ஒருவேளை
நீங்கள்
எனை கண்டும்
காணாமல்
சென்றிருந்தால்
நிச்சயம்
நான் இறந்திருப்பேன்!
இவ்வாறு எல்லாம்
கூறாதே !
என்று
வாயை
அடைத்துக் கொண்டே!
நீயும் நானும் !
காலத்திற்கும்
எந்த தருணத்திலும் (சந்தோஷத்திலும்,சோகத்திலும்)
சேர்ந்தே
வாழ்ந்திடுவோம்!
என்று பகர்ந்தாய்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
