உலகின் ஒட்டுமொத்த நீதி நூல்களையும் ஒரே வார்த்தையில் மொழி படம்
உலகின் ஒட்டுமொத்த நீதி நூல்களையும் ஒரே வார்த்தையில் மொழி பெயர்த்தால் அதன் பெயர் " கொரோனா".... ஆறறிவு மனிதனுக்கு ஒரு செல் கூட அற்ற நுண்ணுயிர் ஒன்று உபதேசம் செய்கிறது... மனித இனத்தின் மீதான இந்த எச்சரிக்கை மணி உலக அசரீரியாக ஒரு சேர ஒலிக்கிறது... தலைகனத்தின் உச்சத்தில் உலகினை ஆட்டிப்படைத்திட்ட வல்லரசுகளின் உச்சந்தலையில் இயற்கை கொடுத்த சம்மட்டி அடியிது... செவ்வாய் கிரகத்தில் புகுந்து வீடு கட்ட திட்டமிட்டவனின் நுரையீரலில் புகுந்து கூடு கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு சிறு கிருமி.... கடவுள் துகள் கண்டுபிடித்தவனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியா நுண்ணுயிரொன்று... கிரீடத்தையும் பிச்சைப் பாத்திரத்தையும் தனது நோயென்னும் துலாக்கோலில் சமமாக எடைபோடுகிறது இந்த ஆச்சரியக் கிருமி.. பணம் பணமென்று எதைப் பற்றியும் கவலைப் படாது ஓடியவனை பிணம் பிணமாய் சாலையில் சாய்த்திருக்கிறது இந்த (அ) சாதாரண நோய்.. இயற்கைக்கு எதிராக தறிகெட்டு ஓடிய மனித வர்க்கத்தின் சுய நலத்தேரின் அச்சாணியைப் பிடுங்கி தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது தீய நோயொன்று.... இன்றும் அதே வானம்... அதே சூரியன்... அதே நிலா... அதே கடல்... அதே காற்று... அதே மலை... ஆனால் மனிதன் நேற்று ஆடாத ஆட்டம் போட்டவன்... இன்று அழுது புலம்புகிறான்... நாளை...??? இயற்கை மட்டுமே இங்கு மாறாதது... இந்த உலகம் இயற்கையினுடையது.. நாமெல்லாம் தற்காலிக ஒப்பந்தக்காரர்கள் இங்கு எதையுமே பங்கு போடவோ... பாகம் பிரிக்கவோ... பங்கம் விளைவிக்கவோ உரிமையற்றவர்கள்... இதைப் பின்பற்றாததன் விளைவு... அழிந்து கொண்டிருக்கிறோமென்று அழுது கொண்டிருக்கிறோம்... விமானங்களற்ற உச்சிவானம்... கப்பல்களற்ற நடுக்கடல்... வாகனங்களற்ற சாலை... புகைமண்டலமற்ற வாயுமண்டலம்... தொலைவில் கேட்கும் பறவையின் ஒலி... காற்றோடு பேசும் இலைகளின் மொழி.. இத்தனை சோகத்திலும் அனுபவித்திட எத்தனையோ இருக்கத்தான் செய்கிறது... இனி இந்த உலகத்தை இயற்கையிடம் ஒப்பிடைப்பதைத்த தவிர வேறு வழியில்லை... இயற்கையே விஞ்ஞானி... இயற்கையே ஆசான்... இயற்கையே இறைவன்...