புரட்சித் தாய்

புரட்சித் தாயே...
போர்...
போர்க்களம்...
போராட்டம்...
எதிரிகள்...
நயவஞ்சகம் ...
வெற்றி...
தோல்வி...யென
இறுதிவரை
போர்களங்களையே
தன் பொற்களங்களாக்கிய
வீரத் திருமகளே...
உன் கம்பீரத்தின்
முன்னே..
தலைமைச்செயலகமே
தாழ்பணிந்ததே...
உன்
ஒற்றைச்சுட்டுவிரலில்
உலக உருண்டையில்
தமிழகம்
தனியே சுழன்றதே...
உன் விழுப்புண்கள்
ஒவ்வொன்றையும்
வெற்ற்ப்படிக்கட்டுகளாக்கி
அம்முவாகிய நீ தமிழகத்தின் அம்மாவாகினாயே..
தங்க நிறம் கொண்ட
சிங்க நகர் தலைவியே...
நீ அறிவித்த
110 விதிகளில்
உன் விதி எதுவென்று
தெரியாமல்
போய்விட்டதே...
திரும்பி வருவாய்
என்று தானேயிருந்தோம்..
இரும்புக்குள்ளும்
கனிவுகொண்ட
தர்மத்தாயே...
பெண்நிலவென
நீ தோன்றிய
அந்த வெள்ளைப்பால்கனியில்
இனி எந்நிலவு தோன்றும்...
எத்தனை அழகு...
எத்தனை ஆளுமை...
எத்தனை அறிவு...
எத்தனை கம்பீரம்...
அத்தனையும்
காலனால் களவாடப்பட்டு
கரையேற முடியா
துயரக் கண்ணீரில்
தமிழகம்
மிதக்கிறதே...
போர்க்களம்
உனக்கு ஓய்வளித்திருக்கிறது...
கோடித் தமிழர்களின்
ப்ரியாவிடை பெற்று
இனியாவது
மெரினாவில் நீ
எவர் தொந்தரவுமின்றி
நிம்மதியாய்
தூங்கு தாயே...