வேறு நிலாக்கள் 38 வெள்ளூர் ராஜா

சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்

வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்.

*
வெள்ளூர் ராஜா



குறிப்பு :

மிகவும் பிரபலமான இந்த ஆழ்ந்த கவிதை வேறு நிலாக்களில் சேர்வது நூலுக்குப் பெருமை.
இது வேறு நிலா 29 என பதிவாகி , தகவல் தெரியாமல் அது இணைப்பில் சேராமல் விடுப்பட்டிருக்கிறது. எனவே புதிதாய் வேறு நிலா 38 ஆக வளம் வருகிறது.

நல்ல கவிதைகளை மீண்டும் மீண்டும் படியுங்கள்...

நேசத்துடன்
கவித்தா

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (6-Apr-16, 4:42 pm)
பார்வை : 126

மேலே