வெற்றியின் எல்லை வெகு தூரமில்லை
ஒவ்வொரு நாளைப் போல
இன்றும் துவங்கி விட்டது..
உன் வாழ்க்கையின் ஓட்டம்...!
உன் உடம்பைப் பக்குவப்படுத்தி
உன்னை நீ தயார் செய்து கொள்....!
உனக்கான பார்வையைப்
பந்தயத்திற்கான
எல்லைக் கோட்டில் பதித்து விடு.....!
உன் இலக்கு அதுவே!
துணிவே துணை!
ஆழ்ந்த மூச்சை இழுத்துப் புறப்படு......!
வெற்றிப் பாதையில் ஓட்டமெடு – தடுக்கி நீ
வீழ்ந்தாலும், தயங்கி விட்டுவிடாதே
இலக்கை நோக்கி எழுந்து ஓடு......!
ஓடிக்கொண்டிரு........!
தோற்றாலும் துவண்டு விடாதே!
பந்தய ஓட்டத்தில் நீயும்
பங்கு கொண்டாய் என கர்வப்படு!
நாம் வெற்றியடையப் பிறந்தவர்கள்,
உன் முழுமுயற்சியே வெற்றியின் ரகசியம்!
வாழ்க்கையின் ஓட்டம் தொடர்கிறது!
உன் வெற்றிக்காகக் கொடியசைத்து
நான் வரவேற்கிறேன்! வா!! ஓடு!!!
உன் வெற்றியின் எல்லை
வெகு தூரமில்லை!