வாழ்வோம் வா

வாழ்வோம் வா

இறந்த காலத்தின்
இடர்பாடுகளில்
சிக்கித் தவிக்கும் மனமே

உதிர்ந்த பூக்கள்
உயிர்பெற்றெழ போவதில்லை

அவை
கவிதையில் கனவில்
பயணிக்கலாம்
நிகழ்கால நிஜத்தில் இல்லை

கவலை கோடுகளை
அழிக்க
பலவீனங்களின் கேடுகளை
கடக்க

நகர்ந்து
போய்கொண்டிருக்கும்
யாவுமே
நாடகத்தின்
ஒரு பகுதியே யென

எண்ணத்தில் எழுதி
வைத்துவிட்டு

அடுத்து நாளை
ஆனந்தமாய் வாழ்வோம் வா

ஆனந்தமே ஆன்மாவின்
ஆற்றல் மருந்து

வாழ்க்கையை
வாழ்வதற்கு
இயற்கை தந்த விருந்து

எழுதியவர் : சூரியகாந்தி (7-Apr-16, 3:34 am)
சேர்த்தது : சூரிய காந்தி
Tanglish : vaazhvom vaa
பார்வை : 133

மேலே