வசீம் அக்ரம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வசீம் அக்ரம் |
இடம் | : புத்தளம் - இலங்கை |
பிறந்த தேதி | : 06-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 388 |
புள்ளி | : 280 |
நான் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவன். தென்னிந்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டு எழுத்துத் துறையில் கால்பதித்துள்ளேன்.
இயற்பெயர் வசீம் அக்ரம் என கவிதைகள் வரைந்தேன் நேற்றுவரை,
புனைபெயர் "உப்பளச்செல்வன்" கொண்டு கவிதைகள் வரைவேன் நாளைவரை..
அவள்
அன்பாலொரு
முத்தம் தந்தாள்
முகத்தில்..
முகம் சிவந்தது
கூடவே
வலியும் சேர்ந்தது..
கோபம் கொண்ட
மூளையது
கையினை ஏவ
கன்னத்திலொரு அறை
மூர்ச்சையாகினாளவள்..
இரத்தம்
சொட்டியவளைக்கண்டு
மனநிம்மதி
கொண்டானவன்
கல் நெஞ்சம்
கொண்டவனல்ல அவன்
பொறுமைக்கும் அளவுண்டாம்
பெரியவர்கள் சொல்வார்கள்..
அவள் தொல்லைக்கு
அளவில்லை
என் செய்வேன்
யானும்
மூட்டையவளே உன்
சேட்டைகளை நிறுத்திவிடு
எனை நிம்மதியாக
உறங்கவிடு..
நினைவு தெரிந்தநாள் முதல்
இன்றுவரை
என் நண்பனாய்
என் வழிகாட்டியாய்..
யாரை யானும்
சொல்ல
எனை ஆளாக்கிய
என்னருமை தந்தையை
சொல்லவா..
காதர் பூங்காவிலே
கால்கடுக்க
என்பின்னே
குதிரையின் மேலே
குதுகலத்தில்
நான்முன்னே..
தன்னலம் பாராது
தன்பிள்ளை மகிழ்வை
பார்க்கும்
பாசமிகு பிதா..
பணத்தின் பெறுமதி
தெரியா பருவத்திலும்
சேமிப்பை கற்றுத்தந்த
ஆசான்..
நாய்க்கும்
பேய்க்குமென
நான் பயந்தாலும்
தைரியத்தை யூட்டி
ஊக்கப்படுத்திய
தோழன்..
நல்லதொரு பிதாவாக
அன்பான ஆசானாக
உற்ற தோழனா
இன்றுவரை..
உன் நட்பு கிடைக்கும்
என்று கருவில் தெரிந்து இருந்தால்
பிறக்கும் போது கூட
அழுது இருக்க மாட்டேன் ....
நண்பா...
கள்ளி சிரித்ததும்
அல்லி விரிந்தது
விழா முடிந்து வந்ததில்
நிலா ஏமாந்தது........!
0)
அருகம்புல்லின்
அருகாமையிலும்
நிலவை தீண்டி
மின்னியது பனித்துளி....!
0)
நிசப்த கனப்பொழுதில்
மெளன நதி மீதினில்
தவளை குதித்ததில்
நிலா நெளிந்தது.....!
0)
மழைக்குப் பிந்தைய
நிலாச்சாரலில்
கூரையிலிருந்து
தாளம் தப்பாமல்
இசை ஒழுகியது ......!
0)
வானத்தில் தொலைந்ததை
மண்ணில் தேடி பயணம்
எங்கும் கும்மிருட்டு
சிறு ஓடையில்
வீழ்ந்து கிடந்தது நிலா....!
அம்மாவை நினைத்து....(2)
அழகிய நிலவைக் காட்டி,
***ஆர்,அதில் உள்ளார் என்ற ,
பழங்கதை எடுத்துக் கூறிப்
***பாலுடன் கலந்து நன்கு ,
குழை,அமுது ஊட்டி னாளின்,
***குறுகியே சிறுத்த வாயில்,
பிழை,மகன் வேகா நின்ற
***பிடி,அரிசி இடுகின் றேனே! ........
நினைவு தெரிந்தநாள் முதல்
இன்றுவரை
என் நண்பனாய்
என் வழிகாட்டியாய்..
யாரை யானும்
சொல்ல
எனை ஆளாக்கிய
என்னருமை தந்தையை
சொல்லவா..
காதர் பூங்காவிலே
கால்கடுக்க
என்பின்னே
குதிரையின் மேலே
குதுகலத்தில்
நான்முன்னே..
தன்னலம் பாராது
தன்பிள்ளை மகிழ்வை
பார்க்கும்
பாசமிகு பிதா..
பணத்தின் பெறுமதி
தெரியா பருவத்திலும்
சேமிப்பை கற்றுத்தந்த
ஆசான்..
நாய்க்கும்
பேய்க்குமென
நான் பயந்தாலும்
தைரியத்தை யூட்டி
ஊக்கப்படுத்திய
தோழன்..
நல்லதொரு பிதாவாக
அன்பான ஆசானாக
உற்ற தோழனா
இன்றுவரை..
மீண்டும் நான் கண்ணீரில்
மூழ்கிறேன் – ஏன்
மிதக்கின்றேன் தண்ணீரில்
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகள்
என்னை பார்ப்பதில்லை
ஏன் நான் செத்தா போயிற்றேன்
செழுமையான என் முற்றம்
சேற்றில் மங்கியது
புற்கள் வளர்ந்து
புதராய் அசிங்கமாகியது
தன்னலம் பாரா
தனவந்தர்களே
சமுகநலம் நோக்கும்
சமுகவாதிகளே
என் நிலைக் கொஞ்சம் பாருங்கள்
எனதருமை செல்வங்களே
-வசீம் அக்ரம்-
முளைகள் சிரித்து
மூத்தவர்களை அழ செய்கிறது
முளைகளும் ஒருநாள்
மூத்தவர்களாகுவார்கள் என மறந்தது ஏனோ..
நய்யாண்டி தனங்களும்
நக்கல்களும்
சில்மிசங்களும்
சின்னதனமாய்
மரியாதை செய்ய
மறுக்கிறதோ மனம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
அக்கணம் புரியும்
மரியாதை தேவையில்லை
அவமரியாதை வேண்டாம்
பாஷமான வார்த்தை தேவையில்லை
விஷமான வார்த்தை வேண்டாம்
-வசீம் அக்ரம்-
கவியொன்று புனைய புறப்பட்டேன் நானும்
கவிஞன் என்றல்ல கவிதைகளின் ரசிகனாய் !
மீண்டும் வானம்பாடிகள் திரண்டன மேகமாய்
மீட்டின கானம்பல பொழிந்தன கார்காலமாய் !
வானம்பாடி வாலிபர்கள் வயோதிகம் அடைந்தாரோ
வானவில்லின் வண்ணமாய் கலைந்து சென்றாரோ !
வன்முறைகள் விதவிதமாய் நாளும் நிகழ்வதாலே
நன்முறைகள் நடைபெற வந்திடுக வானம்பாடிகளே !
இதயங்கள் இடமாறி இருட்டினிலே சுழலுவதால்
நம்பிக்கை ஒளியூட்ட வானம்பாடிகளே வந்திடுக !
பொல்லாமை இல்லாமை இவ்வுலகில் அகன்றிட
நில்லாமல் வந்திடுக நிலையாக வானம்பாடிகளே !
வறுமை ஒழிந்திட்டு வளமை நிலைபெற்றிட
வஞ்சகத்தீ அணைந்திட்டு நெஞ்சமும் குளிர்ந்திட
பஞ்சமா பாதகர்கள் பாரி
அன்பிற்குரிய தோழமையே,
நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. அவற்றைப் பயன்படுத்தும் பெண்கள் படும் அவஸ்தை நரக வேதனை. பெண்பயணிகளில் பெரும்பாலோர் பேருந்து நிலையக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அத்துடன் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்திவிட இரண்டு மடங்கு (சில பேருந்து நிலையங்களில் மூன்று பங்கு) தொகையைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இது சம்பந்தமாக மனுபோட்டுள்ளேன். தாங்கள் இந்த மனுவை ஆமோதிக்கும்படி வேண்டிக்கொளிகிறேன்.
அன்புடன்
பேராசிரியர் இரா. சுவாமிநாதன்