திருமூர்த்தி(கவி முத்தன்) - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : திருமூர்த்தி(கவி முத்தன்) |
இடம் | : GOBI(Tk),ERODE(Dt) |
பிறந்த தேதி | : 15-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 579 |
புள்ளி | : 149 |
வணக்கம்.என் பெயர் வெ.திருமூர்த்தி.வெள்ளியங்கிரி அப்பா,இராஜேஸ்வரி அம்மா,விக்னேஷ் தம்பி.வீட்டில் செல்லப்பெயர் ஆனந்த்.நான் தற்போது பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு பயின்று வருகின்றேன்.என் அப்பா கூலி வேலைக்குச்செல்கிறார்.நான் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்குச் செல்கிறேன்...என் வீடு 148,பெரியார் நகர் என்னும் சிற்றூர் ஆகும்.polavakkalipalayam என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.எனது தமிழ் ஆசிரியர் சதிஷ் குமார் அவர்களை மிகவும் பிடிக்கும்.அண்மையில் அவர் "கரையில் துடிக்கும் மீன்கள்" என்ற கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.. இவரே எனக்கு குரு.. நானும் என் கவிதைகளை புத்தகமாக வெளியிட முயற்சிகள் எடுத்து வருகிறேன்...பணமே எதற்கும் தடையாய் உள்ளது..முயற்சியே எதற்கும் முதல் படி என்று உள்ளேன்...
கருப்பையன் அன்று அவசர அவசரமாக பணி நிறைவடைந்து,மண்வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு சிறு களைப்புடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் கை,கால்,முகங்களை கழுவ அருகாமையில் இருந்த பாம்பு போல் நீண்டு நெளிந்து சென்ற வாய்க்காலின் கரையோரம் சென்றான்..மண்வெட்டியை முதலில் கழுவிக் கொண்டு,அதை கரையில் வைத்துக் கொண்டு அப்படியே குளிக்கலாம் என்று முடிவு செய்து,வாய்க்காலுக்குள் இறங்கி நடந்து செல்கிறான்.தண்ணீர் மிகவும் குளிர்ந்து இருந்தது முதலில் பிறகு,நனைந்தவுடன் சரி ஆனது போல் உணர்ந்தான்.பின்பு நன்றாக உடலை தேய்த்து விட்டுகொண்டிருக்கையில்,
திடீரென,
ஒரு சிவப்புச் சேலை காலில் தடை பட்டது.உடனே
அவள் கன்னக்குழியில்
மூழ்கி நனைந்தேன்...
சிரிப்பென்னும் வெள்ளப்பெருக்கில்...
(பேருந்தில் நான் ரசித்தேன்..அழகான ஒரு மழலையின் சிரிப்பை...)
ஆசை சாக்லேட் வாங்கி
ஆளுக்கொரு புறம் கடுச்சு
அன்பா பழகி வளர்ந்தோம்...
வயற்காடெல்லாஞ்ச் சுற்றி...கருக்காய் நெல் கூட்டி...
வத்திக்குச்சியில பற்ற வெச்சு...
வயித்துப் பசியோட ரெண்டு பேரும்...
வாயப்பொளந்து ஏமாந்து
வேலிமுள் காடு தேடி
வங்கெலி குத்தித் தின்னோம்...
ஒரு மாங்காயடுச்சு
ஓடிவந்து
ஒத்தப்பன மரத்தடிய உட்கார்ந்து
சரிபாதி பங்கு போடத் தெரியாம
ஒத்தப்பனம்பழம் எடுத்து
ஒரு கோட்டை விலக்கி
ஆளுக்கொண்ணு உழும்பித்தின்னு
பல்லுச்சிக்கெடுத்து கத்துகிட்டோம்...
சோளக்காட்டு வேலைக்குப் போகையில
கிளிக்கொஞ்சலப் பிரிச்சு
கறுக்கருவா கம்பு கிண்டி
கம்மாக்கரையோரம்
கலியுரண்டையில புரண்டு வளர
அத்தியும்தான் பழுத்தாச்சு
அந்தியும்தான் பூத்தாச்சு
கொத்தித்திங்க பழம் இருக்க
குருவி நீ எங்க போனையடி!
மூணுரெண்டு வருசமாச்சு காதலிச்சு
மூப்புந்தா வந்து சேர்ந்தாச்சு
கறுத்த மச்சான் நானிருக்க
சொக்கத்தங்கம் நீ போனதெங்கே!
விவசாயி பெத்த மகன்
விருச்சம்ம வளர்ந்து நிக்க
உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க
நீ பொற்கிளியா பறந்தவளே!
நாள ஏழாள பெருக்கி
என் வயசுந்தான் போகுதடி
பாவிமக உன் நெனப்பால
பைத்தியமா ஆனேனடி!
அரசாங்க மாப்பிள்ள வேணுமுன்னு
உன் ஆத்தா அப்பன் சொன்னங்கன்னு
பாவி புள்ள என்னத்தான
பாதியில தூக்கி எருஞ்சவளே!
உனக்காக காத்திருந்து
காலமெல்லாம் போச்சுதடி
இன்று க
ஒரு பெண்ணிடம் எப்படி காதலை குறிப்புணர்த்த வேண்டும்?
ஆசை சாக்லேட் வாங்கி
ஆளுக்கொரு புறம் கடுச்சு
அன்பா பழகி வளர்ந்தோம்...
வயற்காடெல்லாஞ்ச் சுற்றி...கருக்காய் நெல் கூட்டி...
வத்திக்குச்சியில பற்ற வெச்சு...
வயித்துப் பசியோட ரெண்டு பேரும்...
வாயப்பொளந்து ஏமாந்து
வேலிமுள் காடு தேடி
வங்கெலி குத்தித் தின்னோம்...
ஒரு மாங்காயடுச்சு
ஓடிவந்து
ஒத்தப்பன மரத்தடிய உட்கார்ந்து
சரிபாதி பங்கு போடத் தெரியாம
ஒத்தப்பனம்பழம் எடுத்து
ஒரு கோட்டை விலக்கி
ஆளுக்கொண்ணு உழும்பித்தின்னு
பல்லுச்சிக்கெடுத்து கத்துகிட்டோம்...
சோளக்காட்டு வேலைக்குப் போகையில
கிளிக்கொஞ்சலப் பிரிச்சு
கறுக்கருவா கம்பு கிண்டி
கம்மாக்கரையோரம்
கலியுரண்டையில புரண்டு வளர
தாவி வந்த
கால்வாய் நீர்
தாய்ப்பாலாக...
விதையாய்...
நாற்றாய்...
செழித்து வளந்தது
உயிர்ப் பயிர்.
வெள்ளாமை மார்பின்
வீக்கம் பெரிதாக
பச்சை தாவணி கட்டி
வெட்கிச் சிரித்தாள்
வயக் காட்டுக் குமரி.
எல்லா மதிய உணவு
இடைவேளைகளிலும்
பகிர்ந்துண்ணும் அந்தப்
பழைய சோற்றில்
சேர்ந்தே கிடைக்கிறது
கலோரியும் நட்பும்.
நண்பர்கள் (60)

KOHILAMBAL
KODAIKANAL

தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

sundarv
chennai
