பருவப் பூ

கருப்பையன் அன்று அவசர அவசரமாக பணி நிறைவடைந்து,மண்வெட்டியை தோளில் போட்டுக்கொண்டு சிறு களைப்புடன் நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் கை,கால்,முகங்களை கழுவ அருகாமையில் இருந்த பாம்பு போல் நீண்டு நெளிந்து சென்ற வாய்க்காலின் கரையோரம் சென்றான்..மண்வெட்டியை முதலில் கழுவிக் கொண்டு,அதை கரையில் வைத்துக் கொண்டு அப்படியே குளிக்கலாம் என்று முடிவு செய்து,வாய்க்காலுக்குள் இறங்கி நடந்து செல்கிறான்.தண்ணீர் மிகவும் குளிர்ந்து இருந்தது முதலில் பிறகு,நனைந்தவுடன் சரி ஆனது போல் உணர்ந்தான்.பின்பு நன்றாக உடலை தேய்த்து விட்டுகொண்டிருக்கையில்,



திடீரென,








ஒரு சிவப்புச் சேலை காலில் தடை பட்டது.உடனே அதை உணர்ந்த அவன் எடுத்து பார்த்தான்,இருளில் அது சரியாக தெரியவில்லை என்ன நிறமென்று.உற்று பார்த்தவுடன் கண்டு பிடித்தான்,பிறகு எதையும் யோசிக்காமல் அவன் வீட்டிற்கு புறப்பட ஆரம்பித்தான்.தலையை அழுக்குத் துண்டினால் துவட்டிக் கொண்டே வேகமாக நடக்க ஆரம்பித்தான்.



அந்த வழியே ரத்தக் கறைகள் சொட்டு சொட்டாக வடிந்து இருந்தது.அதை நோக்கி கருப்பையன் பின் தொடர ஆரம்பித்தான்.திடீரென,அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் நின்றான்.

-(தொடரும்)

எழுதியவர் : திருமூர்த்தி (28-Feb-14, 11:42 pm)
பார்வை : 176

மேலே