தீப்பெட்டி ராட்சசி பாகம் 1
மிது அதுக்கு என்ன அர்த்தம் ? மிதர்ச்சலாவின் காது மடல்களை அலங்கரிக்கும் காலை வார்த்தைகள் இதுதான். இதை கேட்டகாமல் அவனும் சரி அதற்கு பதில் சொல்ல முடியாது என இவளும் சரி இந்த 1 வருடத்தை நகர்த்தியதே கிடையாது.
‘நீ என்னை ஏற்றுக் கொண்டால்....
கண்ணில் கொஞ்சம் காட்டு...
நீ மட்டும் இல்லையென்றால் நேசிக்காது காற்று...
பேசாத வார்த்தை சொல்லி ....
பேரின்பத்தை கூட்டு....
வாழாத வாழ்க்கை வாழ வா வா....’
தன் கண் முன் இருந்த காதலர் தின வாழ்த்து அட்டையில் பதிந்திருந்த அந்த வார்த்தைகள் மிதர்ச்சலாவை கண் கலங்க வைத்தன. அவளது தோழி ஜஸ்விணின் திருமணத்தின் போது தீஜேவின் காது மடல்களில் அவள் முணுமுணுத்த அந்த தெலுங்கு பாட்டிற்கான தமிழ் அர்த்தத்தை இன்றுதான் தீஜே அவளிடத்தில் சமர் பித்திருக்கிறான்.
கலங்கிருந்த கண்களை விரல்களால் துடைத்தவளை அப்படியே பின்னாலிருந்து வந்து ஆரத் தழுவிக் கொண்டான் தீஜே.
ஹேய்... ராட்சசி.... நீயே என்ன விட்டாலும் நா உன்ன விட மாட்டேண்டி....!
என்றவன் நெஞ்சில் அப்படியே முகம் புதைத்தாள் மிதர்ச்சலா.
உடல், உயிர் ஆத்மா இவ்விரிண்டிலும் நவீன்ஷனைத் தவிர வேறு எந்த ஆணையும் தன்னால் ஜீவிக்க முடியாது என்றிருந்தவளை கடைக் கண்ணின் குறும்பு பார்வையாலும், நக்கலான பொன் சிரிப்பாலும், நவரச தித்திப்போடு கவிகளை அள்ளித் தெளித்து மீண்டும் காதல் என்ற சொர்க்கத்தில் கால் பதிக்க வைத்த தன் தீஜேவை இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
மூச்சாக நினைத்த தன் முதல் காதலையும், தான் தீஜேவை சந்தித்ததும் அவன் அவள் மீது காதல் கொண்ட நாட்களையும் கண் முன்னாள் ஓட விட்டாள் மிதர்ச்சலா.
மணி சரியாக மாலை 7.00. நீல வானம் ஆரஞ்சு மேகங்களோடு ஒன்றோடு ஒன்று கலந்து கண்களை கவர்ந்த வண்ணம் இருந்தது. சுற்றியும் பல காதல் ஜோடிகள் கைகோர்த்த வண்ணம் சிரித்து பேசியபடியும் ஒருவரோடு ஒருவர் ஒட்டி உரசி காதல் மயக்கத்தில் திளைத்திருந்தனர்.
அவர்களை பார்க்கத்தான் முடிந்தது, வேறென்ன செய்ய இயலும் அவளால். இதேப்போல், அவளும் இங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்படிதான் இவர்களைப் போல் காதல் என்ற போர்வையை போற்றிக் கொண்டு சுகமாய் அலைந்தாள்.
இந்நகரத்தின் பிரதானா இடங்களுள் இதுவும் ஒன்று. இதற்கு 'காதல் பூங்கா' என்று பெயர். இளம் காதலர்கள் மட்டுமின்றி வாழும் காலம் கொஞ்சம் நஞ்சம் என்று உணர்ந்திருந்த வயது முதிர்த கிழங்க கட்டைகளும் உடல் தளர்ந்த போதிலும் தங்களது இளமை காதலை வாழ வைக்க இங்கே வந்து அமர்ந்துக் கொண்டு அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அழகை பார்த்து ரசிக்க 2 கண்கள் போதாது.
ஏன் 24 மணி நேரம் கூட போதாது. உனக்கென்ன என்னக்கென்ன என்று ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இந்த வயது முதிர்ந்த உடல் தளர்ந்த காதலர்களை பார்த்தால் புரியும் அவர்களது காதல் என்றுமே இளமைதான் என்று.
அவளும் பார்த்துக் கொண்டேதான் இருந்தாள் வயதான இளம் காதலர்களை. தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். மீண்டும் வானை நோக்கினால். இவளின் இந்நடவடிக்கை இங்கு காதல் பாராட்டும் வாடிக்கையாளர்களுக்கும் இப்பூங்காவிற்கும் மிக வழக்கமாகி விட்டது. கடந்த 3 மாதங்களாக இவள் இங்கு இப்படி தனிமையில் அமர்ந்த படியே வானை பார்ப்பதும், முகமெல்லாம் சிவந்து வீங்கி போகும் அளவு தேம்பி தேம்பி அழுவதும் கேட்க போனால் ஒன்றுமில்லை என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்வதும் அவளது வாடிக்கை.
ஆகையால், முதலில் கொஞ்சம் இரக்கப்பட்டு அவளை தோற்ற நினைத்தவர்கள் எல்லாம் அவளது செயல் கண்டு அவளுக்கு ஏன் உதவ வேண்டும் என்று விலகிக் கொண்டார்கள்.
தொடக்கத்தில் ஏன் என்று கேட்ட இருந்த நாதி கூட இப்போது இல்லை. அனைவரும் ஜோடியாய் காதல் கொள்ள இவள் மட்டும் தனிமையில் காதல் கொண்டாள். தனிமையில் இனிமைக் காண்பது இதுதான் போல என்று பல காதல் ஜோடிகள் இவளை அவ்வப் போது கேலி செய்வதும் உண்டு. முதலில் கேட்டப் போது அவளுக்கு இருந்த மன வலியில் இன்னமும் ஆத்திரம் தான் அதிகமாய் வந்தது.
காலப் போக்கில் அவர்கள் சொல்வதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.காரணம் அவளுக்கு அவளது மன வழியே மிகப் பெரிதாய் தெரிந்தது.
6 மாதங்களுக்கு முன்பு இதேப் பூங்காவில் அவளும் அவனும் சந்தித்துக் கொண்டனர். பேசினார்கள், பழகினார்கள். அவன் காதல் என்று சொன்னான். இவள் யோசிக்கணும் என்றாள். அவளைக் கொஞ்சம் விட்டு பிடித்தான். கண்கள் குளமாக தேடி வந்தாள். அப்படியே அவளை அள்ளிக் கொண்டான். இவளை விட அவனே அதிகமாய் செலவு செய்தான். கேட்டதெல்லாம் வாங்கித் தந்தான். நொடிப் பொழுதும் சிரிக்க வைத்தான். சண்டை என்ற ஒன்றே அவர்களிடத்தில் கிடையாது. அவளது முதல் காதல்.
பைத்தியமாய் இருந்தாள் அவன் மீது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது அவளுக்கு. அவளது உலகமே அவன் தான். அவளுக்கு தெரிந்ததெல்லாம் நவீன்... நவீன்ஷன் மட்டுமே. அவள் இப்படி அவன் மீது பைத்தியமாய் இருந்தது அவனுக்கு போடிகவில்லையோ அல்லது அவளது அளவில்லா அன்பு திகட்டி விட்டதா என்றுக் கூட தெரியவில்லை. பழகிய 3 மாதங்களிலேயே அவனிடத்தில் பெரிய மாற்றம்.
24 மணிநேரமும் அவளுடனேயே தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவன் அதைத் தவிர்க்க ஆரம்பித்தான். அவளை சந்திப்பதையும் தவிர்த்தான். அவளது குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லை. அவனது வாசல் தேடி சென்றாள். பயனில்லை. அவன் காலி செய்து 1 வாரம் ஆகிறது என்ற விசியம் அக்கம் பக்கம் மூலமாய் தெரிய வந்தது.
நெஞ்சம் கனத்தது. தன்னை விட்டு சென்று விட்டான ? தன்னை ஏமாற்றி விட்டான ? என்று யோசிப்பதை விட அவனுக்கு என்ன ஆகி இருக்கும் ? உணவு உண்டு இருப்பான ? நல்ல வசதியான இடமாக பார்த்து வாடகைக்கு எடுத்திருப்பான ? அவனது கையில் போதுமான அளவு பணம் இருக்கிறதா ? அப்படி பணம் போதவில்லை என்றால் என்ன செய்வான் ? இப்படி அவனைப் பற்றியே சதா சிந்தித்த வண்ணம் இருந்தாள் காதல் பேதை.
சில நாட்கள் களைத்து அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் என்னை மறந்து விடு என்று வெறும் இந்த 3 வார்த்தைகள் மட்டுமே இருந்தது. அவளால் அதை எற்றுக் கொள்ள இயலவில்லை. அவளது உலகம் நின்று விட்டது. மூர்ச்சையாகி கிழே விழுந்தாள். சில மணி நேரங்கள் கழித்து கண்கள் விழித்தாள்.
தற்கொலையே சரியான முடிவு என்று தீர்மானித்தாள். வேகமாக சமையலறையை நோக்கி ஓடினாள். அங்கி அடிக்கி வைத்திருந்த வரிசையில் பல கத்திகள். அதில் ஒன்று இப்போது அவள் கையில். தனது வலது கை நாடியை வெட்ட துணிந்து கத்தியை நாடியின் நரம்பின் பக்கம் வேகமாக எடுத்து சென்றாள். அவ்வேளை அவளறியாமல் அவள் தம்பி அவளை தடுத்து நிறுத்தினான்.
கதறி அழுதாள் அவனது மார்பில் முகம் புதைத்து. அக்கா கதறுவதை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவளை திடப்படுத்த பல அறிவுரைகளை சொன்னான். அவள் செய்யப் போன முட்டாள் தனத்தின் விளைவை பற்றி எடுத்துரைத்தான். அது கோழர்களின் செயல் என்றான்.அப்போதாவது அவளது மரமண்டைக்கு புரியட்டும் உயிர் என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்று.
ஒரு வாரம் வெறும் அழுகையின் கதறல்களோடு முடிந்தது ஒரு வாரம் வெறும் அழுகையின் கதறல்களோடு முடிந்தது. கவலையின் ஊடே ஆள் துரும்பாய் இளைத்துப் போயிருந்தாள். அவனது நினைவுகளை சுமந்தப் படியே அவர்கள் சுற்றி வந்த இடங்களுக்கெல்லாம் இவள் தனியாகவே சென்று உலாவ ஆரம்பித்தாள். இதன் மூலம், நொடிப்பொழுதும் அழுதவள் கொஞ்சம் குறைச்சலாய் அழ ஆரம்பித்தாள். அவளது முகமும் பூசனியைப் போல் வீங்கிப் போகாமால் பார்க்கும் படி லட்சணமாய் இருந்தது.
அவனின் என்ன அலைகளில் உருண்டோடியே அவளுக்கு இன்னோர் விஷயமும் எண்ணத்தில் சிக்கியது. அவள் காதல் கொண்ட புதிதில் அவளது பணியகத்தில் அனைவரும் ஆரம்பம் தொட்டே அவளை கொஞ்சம் எச்சிரிக்கையாய் இருக்க சொன்னனர். முதல் காதல் வேறு.கொஞ்சம் கூடுதல் கவனம் பின்னாளில் அவள் காயப்படாமல் இருக்க வழிவகுக்கும். அலாதியான அன்பின் அஸ்திவாரம் மிகவும் கெட்டியான வேர் போன்றது அவ்வளவு சுலபத்தில் வெட்டி துக்கி எறிந்திட முடியாது.
அதுவும் பெண் மனம் மிகவும் ஆழமானது என்று ஒரு கவிஞர் கூட பாடல் ஒன்று எழுதி உள்ளாராம், சொன்னால் கேளடி மண்டு அவசரப் பட்டு எதையும் இழந்து துளைத்து விடாதே என்று கரிசனமாய் சொன்னவர்கள் அதனை பேர் வாயிலும் சக்கரையை அள்ளிக் கொட்ட வேண்டும் போலிருந்தது. அவர்கள் அனைவரும் சொல்லியும் திமிரெடுத்து தானாக தேடிக் கொண்ட இந்த வலிக்கு தானே மருந்தும் தேடிக் கொள்ள வேண்டும் என்பது அவள் அதன் பின்னால் தீர யோசித்து எடுத்த முடிவு.
அதன் காரணமாய்த் தான், கடந்த 3 மாத காலாமாய் இந்த காதல் பூங்காவில் தனிமை சிறையில் தன்னந்தனி கிளியாய் தன்னைத் தானே வருத்திக் கொண்டு இருக்கிறாள்.
பத்திக்கும் தீப்பெட்டி !