டிஜிட்டல் சரவணன் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  டிஜிட்டல் சரவணன்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  11-May-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2013
பார்த்தவர்கள்:  896
புள்ளி:  127

என்னைப் பற்றி...

அப்போது : பி.எஸ்சி கணிதம் (திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி)
இப்போது : வீடியோ பதிவாளர் மற்றும் தொகுப்பாளர்
முற்போதும் : நல்ல நண்பர்களை விரும்பி, ஏற்பது
எப்போதும் : தமிழை நினைப்பது
எப்போதாவது : கவிதை, கதை கிறுக்குவது
நேரம் கிடைத்தால் : நண்பர்களின் படைப்பிற்கு கருத்து சேர்ப்பது
நேரம் போதாவிட்டால் : எழுத்து.காம் பக்கம் வருவதற்கு பயப்படுவது

என் படைப்புகள்
டிஜிட்டல் சரவணன் செய்திகள்
டிஜிட்டல் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2018 8:35 am

தென்னகத் தமிழே, தென்றல் காற்றே
திருக்குவளை தந்த திறன்மிகு தலைவோய்
முத்துவேல் அஞ்சுகத் தம்பதி பெற்ற
தட்சிணா மூர்த்தியே, கருணா நிதியாய்
அழகிரி சாமியின் அரசியல் பேச்சால்
அரசியல் வாதியாய் அடையாளம் காண
இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி
இணையிலா அரசியல் அடிதனை ஊன்றி
வரலாற்று நாயகன் வரலாறு படைக்க
குளித்தலைத் தொகுதி வெற்றியை வழங்க
தான் போட்டியிட்ட தேர்தல் அனைத்திலும்
தேறியே வெற்றித் தேனைச் சுவைத்து
ஐம்பது ஆண்டுகள் திமுக தலைவராய்
ஐந்து தேர்தலில் தமிழக முதல்வராய்
ஆற்றிய பணிகள் அளவிடற் கரியது
அன்னவர் வழியோ அனைத்திலும் சிறந்தது
சூரியனை மேகங்கள் மறைக்க எண்ணி
சூரியனின் கிரணத்தை அடக்க எண்ணி

மேலும்

டிஜிட்டல் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2016 6:27 pm

அழகான புன்சிரிப்பு, அன்பான அரவணைப்பு
அன்னை, தந்தையர்க்கு அடுத்த இடமிவர்க்கு
தெய்வம் இல்லையெனும் பகுத்தறிவு வாதிகளும்
தெய்வமாய் காணுகின்ற ஆசிரியப் பெருந்தகையே

வரலாறு படைத்திடவே, வாழ்க்கை கொடுத்தோரை
வாழ்த்த வயதில்லை, வார்த்தை கிடைக்கவில்லை
ஏணியாய் இருந்திங்கு, எம்மை ஏற்றுவோர்க்கு
என்னால் இயன்றதெல்லாம் எளிமையாய் இக்கவிதை

எம்வாழ்வு ஒளிபெறவே தம்வாழ்வைத் திரியாக்கி
கல்வியுடன், அனுபவத்தை கச்சிதமாய் வழங்கியிங்கே
சிறப்பான சிந்தனையும், சித்தாந்த அறிவுரையும்
நடைமுறை பயிற்சியையும் நயமாக வழங்கியவர்

மூச்சை அடக்கி முத்துக் குளித்திங்கே
முழுமையாய் உம்வாழ்வை முத்தாக அளித்தாயே
முத்தான மாணாக்

மேலும்

டிஜிட்டல் சரவணன் - டிஜிட்டல் சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2016 11:22 am

துவேஷங்கள் நீங்கிட
துயரங்கள் மறைந்திட
தொடங்கிய புத்தாண்டு
துன்முகியாம் நன்முகி
நறுமலராய் பூத்திட
நானிலமும் சிறந்திட
நலம்பல பிறந்திட
நல்கட்டும் சிறப்பினை...

மேலும்

நன்றி சகோதரரே! தங்களுக்கும் உரித்தாகுக... 15-Apr-2016 6:11 am
நெஞ்சம் நிறைந்த சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 15-Apr-2016 12:32 am
டிஜிட்டல் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2016 11:22 am

துவேஷங்கள் நீங்கிட
துயரங்கள் மறைந்திட
தொடங்கிய புத்தாண்டு
துன்முகியாம் நன்முகி
நறுமலராய் பூத்திட
நானிலமும் சிறந்திட
நலம்பல பிறந்திட
நல்கட்டும் சிறப்பினை...

மேலும்

நன்றி சகோதரரே! தங்களுக்கும் உரித்தாகுக... 15-Apr-2016 6:11 am
நெஞ்சம் நிறைந்த சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 15-Apr-2016 12:32 am
டிஜிட்டல் சரவணன் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 12:35 pm

“பறவைகளுக்கு அதன் உரிமையைக் கொடு” என்ற ஸ்லோகனோடு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ப்ளூ க்ராஸ் அமைப்பு ஒரு சேவல் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சேவலையோ கோழியையோ பார்க்கிறவர்கள் அதை ஒரு சாப்பாட்டுப் பொருளாக பாவிக்கிறார்களே ஒழிய அந்தப் பறவைகளும் நம்மைப் போலவே உயிரும் உணர்வும் நிரம்பிய படைப்புகள் என்பதை ஏனோ மறந்து போகிறார்கள். ஊர் உலகத்துக்கு “சிக்கன் பிரியர்கள்” இருப்பதைப் போலவே சேவல் பிரியர்களும் உண்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

சேவல் வாக், சேவல் பந்தயம், திருவாளர் சென்னை, திருவளர் சென்னை - கோழியழகிப் போட்டி, சேவல் கலந்துரையாடல், சேவல் விற்பனை போன்ற

மேலும்

ஐயையே, ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி; நான்கு வேளை உண்பவன் போகி ( போய்ச்சேர வேண்டியவன்) என்று சொல்லி வைத்தது நானல்ல. நம் முன்னோர்கள். இன்றைய விஞ்ஞானம் அதைத்தான் சொல்கிறது - முப்பது வயதுக்கு மேல் இரவு உணவு தேவையில்லை என்று. இரவு உணவை தவிர்க்க வேண்டும்; காலை உணவை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 16-Jun-2015 5:20 pm
ஏங்க, இரண்டு தட்டு தட்டணும்னா தட்டிட்டுப் போங்க. இல்ல உங்களோட நேர மேலாண்மையை பத்தி சொல்லாம வேணா போங்க. அதவுட்டுட்டு, மூணு வேளையை, இரண்டு வேளையா குறைங்க, அது இதுன்னு..... 16-Jun-2015 3:21 pm
நேரமாவது மேலாண்மையாவது.... மூச்சு முட்டித்தான் போகிறேன்.. ஆனால் சில டிப்ஸ்; அதிகாலை எழுந்து வேலையை ஆரம்பித்தால் நேரம் நிறைய கிடைக்கும். மூன்று வேளை சாப்பிடுவதை இரண்டு வேளையாக குறைத்தால் நேரம் நிறைய கிடைக்கும். உங்கள் நோக்கத்தை முறைப்படுத்திக் கொண்டாலும் நேரம் கிடைக்கும். உதாரணமாக புத்தக அலமாரியை சுத்தப்படுத்த போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடக்கூடாது.... அப்படி. எனக்கு கிரைம் தொடரும் எழுத வரும். படித்துப் பாருங்களேன். அதுவும் அனுபவம் போல் தான் இருக்கும். 16-Jun-2015 2:56 pm
மூன்று நாட்களாக, ஜூன் 13, 2015 ஆரம்பித்து, மே 2, 2015 வரை இப்பொழுதுதான் வந்துள்ளேன். இதிலும் ஒரு தொடர்கதையை விட்டு விட்டேன். அடிக்கிற வெயிலில், பாராட்டக் கூட வார்த்தைகள் வர மறுக்கிறது..................................................................... நன்று. "செவிக்குணவில்லாத போழ்து சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்பது போல தாங்கள் எப்படி "நேர மேலாண்மை" ("Time Management") யை முறைப்படுத்துகிறீர்கள்? தெரிந்தால் நாங்களும் பின்பற்றலாமே!!! 15-Jun-2015 5:57 pm
டிஜிட்டல் சரவணன் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2015 12:59 pm

................................................................................................................................................................................................
நகர மத்தியில் அமைந்திருந்த தமது அலுவலக அறையில் அப்போதுதான் நுழைந்தார் பிரபல ஃபேஷன் டிசைனர் கௌரிசங்கர். தேர்ந்தெடுத்து அவர் அணிந்திருந்த ஆடைகள் ரசனையும் கண்ணியமும் கொண்ட ஒரு ஆண் மகனை கண் முன் நிறுத்தின.

அவருக்காக நெடு நேரம் காத்திருந்த ஷீபா எழுந்தாள். மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பரிசு வென்றவள். அவளின் வெற்றிக்கு கௌரிசங்கர் வடிவமைத்துக் கொடுத்த ஆடைகளும் ஒரு காரணம். அன்று மாலை ஏற்பாடு செய்திருந்த பார

மேலும்

தங்கள் சிறுகதைகளே வித்தியாசமான விஷயங்களை விவரிக்கும்போது இந்த "மாற்றம்- வித்தியாச சிறுகதை" யை என்னவென்று விவரிப்பது..... 15-Jun-2015 5:32 pm
நன்றிங்க. 16-May-2015 10:29 am
படிக்கும் போதே ஒரு மகிழ்ச்சி. அதிலும் நாயகன் தன் உறுத்தலான அனுபவத்தையே வெற்றி யாக்கும் போது. 15-May-2015 2:59 pm
டிஜிட்டல் சரவணன் - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 9:48 pm

................................................................................................................................................................................................

திங்கட் கிழமை, அதிகாலை ஐந்து மணிக்கு அமைதியை வம்புக்கு இழுத்தது அலாரம் இசை. என் ஹாஸ்டல் அறையில் என்னைத் தவிர இரு மாணவியர் இருந்தனர். ரூபா, லதா; இருவருமே என் வகுப்புத் தோழியர். அலாரத்தின் இசையில் இருவரும் பாம்பு போல் நெளிந்து அடங்கினர். கடிகாரத்தை எட்டிப் பிடித்து தலையில் தட்டியபோது மணி 5.03. ஏழு நிமிடம் தூங்கி ‘முழு எண்ணில்’ எழுந்திரிக்க ஆசைப்பட்டு போர்வையை போர்த்திக் கொண்ட சமயம் சிவகுமாரிடமிருந்து ம

மேலும்

நன்றி சகோதரரே. என் கதை என்னைப் போல் தானே இருக்கும் - நான் நடித்திருந்தாலும், இல்லையென்றாலும்.... 16-Jun-2015 2:42 pm
தங்களது இந்தக் கதையும் நிஜத்தை நினைவுறுத்துகின்றன. இக் கதையில், தாங்கள் எந்த நடிகராக நடிக்கிறீர்கள்? தாங்களும் இதில் நடித்திருந்தால் மட்டுமே, கதையோட்டம் இவ்வளவு இயல்பாகவும், சிறப்பாகவும் அமைய இயலும். மொத்தத்தில், கதை அருமை... 15-Jun-2015 5:06 pm
டிஜிட்டல் சரவணன் - டிஜிட்டல் சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 6:25 pm

பெருகிவரும் வாகனங்கள், தானோடப் பயன்படுத்தும்
பெட்ரோலியப் பொருட்களினால், மூச்சுவிடத் தான்அவதி

புரையோடும் புற்றுநோயை, என்னுள்ளே உருவாக்கும்
பிளாஸ்டிக்குப் பைகளினால், நீர்அருந்தத் தான்அவதி

மீத்தேன் திட்டத்தால், நிலத்தடி நீர்குறைய
விவசாய பாதிப்பால், உணவருந்தத் தான்அவதி

ஆறுகளில் மணல்திருட்டு, அளவின்றி நடந்தேற
நிலநடுக்கம் உருவாகும், அபாயத்தால் தான்அவதி

விருட்சக் கொலைகளினால், மழைபொழிவு மிகக்குறைய
வெப்பம் அதிகரித்து, புழுக்கத்தால் தான்அவதி

தாதுமணல் கொள்ளையினால், செல்வங்கள் அழிந்திடவே
வருங்கால வைப்புநிதி, வகையின்றித் தான்அவதி

இன்னும் பலஉண்டு... ஆம், அவதிகள்
இன்னும் பலஉண்டு, எடு

மேலும்

கொங்கு நாட்டில் பிறந்து மராத்திய மண்ணில் வளரும் மா சிங்க ராஜனுக்கு மனமார்ந்த நன்றி... 01-Mar-2015 7:07 am
சிறப்பாக உள்ளது ! வாழ்த்துக்கள் நண்பரே ! 28-Feb-2015 11:17 pm
டிஜிட்டல் சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2015 6:25 pm

பெருகிவரும் வாகனங்கள், தானோடப் பயன்படுத்தும்
பெட்ரோலியப் பொருட்களினால், மூச்சுவிடத் தான்அவதி

புரையோடும் புற்றுநோயை, என்னுள்ளே உருவாக்கும்
பிளாஸ்டிக்குப் பைகளினால், நீர்அருந்தத் தான்அவதி

மீத்தேன் திட்டத்தால், நிலத்தடி நீர்குறைய
விவசாய பாதிப்பால், உணவருந்தத் தான்அவதி

ஆறுகளில் மணல்திருட்டு, அளவின்றி நடந்தேற
நிலநடுக்கம் உருவாகும், அபாயத்தால் தான்அவதி

விருட்சக் கொலைகளினால், மழைபொழிவு மிகக்குறைய
வெப்பம் அதிகரித்து, புழுக்கத்தால் தான்அவதி

தாதுமணல் கொள்ளையினால், செல்வங்கள் அழிந்திடவே
வருங்கால வைப்புநிதி, வகையின்றித் தான்அவதி

இன்னும் பலஉண்டு... ஆம், அவதிகள்
இன்னும் பலஉண்டு, எடு

மேலும்

கொங்கு நாட்டில் பிறந்து மராத்திய மண்ணில் வளரும் மா சிங்க ராஜனுக்கு மனமார்ந்த நன்றி... 01-Mar-2015 7:07 am
சிறப்பாக உள்ளது ! வாழ்த்துக்கள் நண்பரே ! 28-Feb-2015 11:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராம்

ராம்

காரைக்குடி
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (48)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (48)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
மேலே