பாரதத்தாயின் பரிதவிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
பெருகிவரும் வாகனங்கள், தானோடப் பயன்படுத்தும்
பெட்ரோலியப் பொருட்களினால், மூச்சுவிடத் தான்அவதி
புரையோடும் புற்றுநோயை, என்னுள்ளே உருவாக்கும்
பிளாஸ்டிக்குப் பைகளினால், நீர்அருந்தத் தான்அவதி
மீத்தேன் திட்டத்தால், நிலத்தடி நீர்குறைய
விவசாய பாதிப்பால், உணவருந்தத் தான்அவதி
ஆறுகளில் மணல்திருட்டு, அளவின்றி நடந்தேற
நிலநடுக்கம் உருவாகும், அபாயத்தால் தான்அவதி
விருட்சக் கொலைகளினால், மழைபொழிவு மிகக்குறைய
வெப்பம் அதிகரித்து, புழுக்கத்தால் தான்அவதி
தாதுமணல் கொள்ளையினால், செல்வங்கள் அழிந்திடவே
வருங்கால வைப்புநிதி, வகையின்றித் தான்அவதி
இன்னும் பலஉண்டு... ஆம், அவதிகள்
இன்னும் பலஉண்டு, எடுத்துரைக்க மணிபோதா
வெள்ளையரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை
கொள்ளையர்கள் கையில் கொத்தாகக் கொடுத்தோமோ!
மகனே நேதாஜி,
அடிஉதவுவதுபோல், அண்ணன்தம்பி உதவாராம்
அதுபோல எனைக்காக்க, எங்குள்ளாய் சொல்லெனக்கு
இயற்கைப் பேரழிவை, இன்றே தடுத்தெனக்கு
மீண்டும் சுதந்திரத்தை, மீட்டுத் தருவாயா???