கழனி

தாவி வந்த
கால்வாய் நீர்
தாய்ப்பாலாக...
விதையாய்...
நாற்றாய்...
செழித்து வளந்தது
உயிர்ப் பயிர்.
வெள்ளாமை மார்பின்
வீக்கம் பெரிதாக
பச்சை தாவணி கட்டி
வெட்கிச் சிரித்தாள்
வயக் காட்டுக் குமரி.

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (7-Jan-14, 12:00 am)
Tanglish : kazhni
பார்வை : 80

மேலே