தடுமாற்றங்கள்
*பானையில் உலை கொதிக்கின்றது
சூடு தாங்காது தப்பியோட இடம்தேடி
முந்தும் அரிசியொன்று குதிக்கின்றது
*நின்றுகொண்டே கழிகிறது நேரம்
கைகளில் இருக்கும் கொள்முதல் பைகளோ
தூக்க முடியாத பாரம்
*மிகையொலியுடன் அலறுகிறது பாட்டு
பரீட்சையில் பாதி எழுதப்பட்ட பதிலோ
திணறுகிறது அதனைக் கேட்டு
*சமுதாயத்தில் அவனும் மனிதன்
காவிக்குள் புகுந்து வரம் கொடுத்தால்
கையெடுத்துக் கும்பிடப்படும் புனிதன்
*பகலெல்லாம் சூரியன் பார்க்கிறது
ஆனாலும் மின்சாரம் இல்லாத போதே
வெப்பம் கூடி வேர்க்கிறது
(லிமரைக்கூ : முதல் முயற்சி )