வயிறு வளர்த்தது

ஆசை சாக்லேட் வாங்கி
ஆளுக்கொரு புறம் கடுச்சு
அன்பா பழகி வளர்ந்தோம்...

வயற்காடெல்லாஞ்ச் சுற்றி...கருக்காய் நெல் கூட்டி...
வத்திக்குச்சியில பற்ற வெச்சு...
வயித்துப் பசியோட ரெண்டு பேரும்...
வாயப்பொளந்து ஏமாந்து
வேலிமுள் காடு தேடி
வங்கெலி குத்தித் தின்னோம்...

ஒரு மாங்காயடுச்சு
ஓடிவந்து
ஒத்தப்பன மரத்தடிய உட்கார்ந்து
சரிபாதி பங்கு போடத் தெரியாம
ஒத்தப்பனம்பழம் எடுத்து
ஒரு கோட்டை விலக்கி
ஆளுக்கொண்ணு உழும்பித்தின்னு
பல்லுச்சிக்கெடுத்து கத்துகிட்டோம்...

சோளக்காட்டு வேலைக்குப் போகையில
கிளிக்கொஞ்சலப் பிரிச்சு
கறுக்கருவா கம்பு கிண்டி
கம்மாக்கரையோரம்
கலியுரண்டையில புரண்டு வளர்ந்தோம்...

கருங்காளி திருவிழாவில்
காப்புக்கட்டின காலுக்கு
செருப்பு வாங்கி போட்டு விட்டு
வெறுங்காலில் நான் நடக்க...
திருவிழா வீதிப்பரவலா வெயிலடிக்க
ஆளுக்கொரு செருப்பு மாட்டி
நொண்டியடுச்சு
நோம்பி கொண்டாடினோம்...



ஒன்ன வளர்ந்தோம்...
ஒரே தாய் மடியில் துயின்றோம்...



காலமும் வளர்ந்திருச்சு...
காசுக்கு மாறிடுச்சு...

எல்லாம் மறைஞ்சிருச்சு...

உன்னையும்
என்னையும் தவிர...

அன்று அந்த தூக்குப்போசியில்...
இன்று அதே தூக்குப்போசியில்...

எழுதியவர் : திருமூர்த்தி (24-Jan-14, 1:51 pm)
பார்வை : 124

மேலே