என்னை மூப்பாக்கி போனவளே
அத்தியும்தான் பழுத்தாச்சு
அந்தியும்தான் பூத்தாச்சு
கொத்தித்திங்க பழம் இருக்க
குருவி நீ எங்க போனையடி!
மூணுரெண்டு வருசமாச்சு காதலிச்சு
மூப்புந்தா வந்து சேர்ந்தாச்சு
கறுத்த மச்சான் நானிருக்க
சொக்கத்தங்கம் நீ போனதெங்கே!
விவசாயி பெத்த மகன்
விருச்சம்ம வளர்ந்து நிக்க
உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க
நீ பொற்கிளியா பறந்தவளே!
நாள ஏழாள பெருக்கி
என் வயசுந்தான் போகுதடி
பாவிமக உன் நெனப்பால
பைத்தியமா ஆனேனடி!
அரசாங்க மாப்பிள்ள வேணுமுன்னு
உன் ஆத்தா அப்பன் சொன்னங்கன்னு
பாவி புள்ள என்னத்தான
பாதியில தூக்கி எருஞ்சவளே!
உனக்காக காத்திருந்து
காலமெல்லாம் போச்சுதடி
இன்று காலாவதி ஆனா என்ன
கண்டாரும் கேப்பாரோ!
என்ன நானும் சொல்ல
என்னவள் இருந்த நெஞ்ச
களையிழந்த மாடத்தில
காக்கா குருவி எச்சமிட!
சோகங்கள சொல்லி அழ
சொந்தமுனு யாருமில்ல
அன்னம் தண்ணி உண்ணாத
அடைக்கோழி நானானே!
சொல்ல சொல்ல சோகம்தான்
சொன்ன சோகம் பாதிதான்
பாதியில பாவிநான்
நான் இன்று நானில்லை உன்னாலே!
இன்றும் உன் நினைவுடன்
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த