பாடசாலை பேசுகிறேன்

மீண்டும் நான் கண்ணீரில்
மூழ்கிறேன் – ஏன்
மிதக்கின்றேன் தண்ணீரில்
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகள்
என்னை பார்ப்பதில்லை
ஏன் நான் செத்தா போயிற்றேன்
செழுமையான என் முற்றம்
சேற்றில் மங்கியது
புற்கள் வளர்ந்து
புதராய் அசிங்கமாகியது
தன்னலம் பாரா
தனவந்தர்களே
சமுகநலம் நோக்கும்
சமுகவாதிகளே
என் நிலைக் கொஞ்சம் பாருங்கள்
எனதருமை செல்வங்களே
-வசீம் அக்ரம்-