மூத்தவர்களை இகழாதே

முளைகள் சிரித்து
மூத்தவர்களை அழ செய்கிறது
முளைகளும் ஒருநாள்
மூத்தவர்களாகுவார்கள் என மறந்தது ஏனோ..
நய்யாண்டி தனங்களும்
நக்கல்களும்
சில்மிசங்களும்
சின்னதனமாய்
மரியாதை செய்ய
மறுக்கிறதோ மனம்
ஒரு கணம் சிந்தியுங்கள்
அக்கணம் புரியும்
மரியாதை தேவையில்லை
அவமரியாதை வேண்டாம்
பாஷமான வார்த்தை தேவையில்லை
விஷமான வார்த்தை வேண்டாம்
-வசீம் அக்ரம்-