நிலாச் சாரல் ----- அஹமது அலி---
கள்ளி சிரித்ததும்
அல்லி விரிந்தது
விழா முடிந்து வந்ததில்
நிலா ஏமாந்தது........!
0)
அருகம்புல்லின்
அருகாமையிலும்
நிலவை தீண்டி
மின்னியது பனித்துளி....!
0)
நிசப்த கனப்பொழுதில்
மெளன நதி மீதினில்
தவளை குதித்ததில்
நிலா நெளிந்தது.....!
0)
மழைக்குப் பிந்தைய
நிலாச்சாரலில்
கூரையிலிருந்து
தாளம் தப்பாமல்
இசை ஒழுகியது ......!
0)
வானத்தில் தொலைந்ததை
மண்ணில் தேடி பயணம்
எங்கும் கும்மிருட்டு
சிறு ஓடையில்
வீழ்ந்து கிடந்தது நிலா....!