fuji - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/vifxz_26642.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : fuji |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 196 |
புள்ளி | : 16 |
இந்தியாவின் மானம் காற்றில் பறக்கும் காட்சி!
கண்டும் காணாத கையாலாகாத ஆட்சி!
இதில் நான் எனது எண்ணத்தை வெளியிட்டால் உடனே தளம் அதை நீக்கிவிடும்.
முன்பு சமூக நல்லிணக்கத்தை சொல்லும் ஒரு எண்ணத்தையும், பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த எண்ணத்தையும் நீக்கி விட்டார்கள்.
எனவே தேசத்தை மதிக்க கூடிய இந்தியர்கள் சாதி மதம் மறந்து உண்மையான கருத்தை வெளிப்படுத்துங்கள்.
உன் காந்த விழிப் பார்வையால் ,
துரும்பாகிப் போன என்னையும்
இரும்பாக்கி உன் பக்கம்
ஈர்க்கிறாயடிப் பெண்ணே !
...................சஹானா தாஸ்
அந்தக் கருப்பு ஆட்டை
அவ்வளவாக யாருக்கும்
அத்தனை பிடிப்பதில்லை
இத்தனைக்கும் பிறப்பின் போதே
உடன் பிறந்த இரண்டு
முயல் வண்ண வெளிர் குட்டிகளை விட
விரைந்து நிற்கவும்
தனித்துப் புற்களை
மேயவும் கற்றுக் கொண்டது
வெள்ளைக் குட்டிகளை
அல்லையில் தூக்கி
கொஞ்சுவோரைப் பார்க்கும்போதெல்லாம்
அதன் நிலைத்த கண்கள்
எதையோ தொலைத்ததைப்
போலவே இருக்கும்
புண்ணாக்குந்த் தண்ணியும்
பாலாட்டங் குழையும்
வெள்ளைக் குட்டிகளுக்கு போக
மீந்ததே இந்தக் கருப்புக்கு
அவ்வப்போது அது குறித்த
கவலைகளை சட்டென்று
எழுந்து உடல் குலுக்கி
நான்கு கற்றை மயிர்களை உதிர்த்து
கிளம்பி மேயச் சென்று விடும்
மௌன அஞ்சலி.......!
உனக்கும் எனக்குமான
நிர்பந்தம் தவிர்த்த உறவில்
தடம் புரளா
ரயில் பெட்டிகள் போல்
சிரத்தை கொண்டு
பயணம் செய்தோம் ...
கால ஓட்டத்தில்
தடங்களும் விரிசல்காண
பெட்டிகள் புரண்டு
உருக்குலைந்து போனோம்!
பிரயத்தனைக் கொண்டு
நெய்யப்பட்ட
சிலந்திவலை உறவில்
ஒவ்வொரு இழைகளாய்
அற்றுப்போக
உனக்காக நானும்
எனக்காக நீயும்
சேகரித்தப் பொருட்கள்
நம்மைப் பார்த்து
ஏளனம் செய்கிறது!
என்றேனும் ஒருநாள்
உன் நினைவில்
நான் வருவதாயின்
அந்த நொடிப்பொழுதில்
எனக்காக மௌனம் காத்து
அஞ்சலி செலுத்திடு!
விட்டுப்போன கடைசித்துளி
கண்ணீரில் ஒரு துளியைக்கூட
சிந்தி.. சிதறி
உன்னால் அதிகமாய்
உச்சரிக்கப் பட்ட ஒரே வார்த்தை
இது தான்...
இது வார்த்தையா,எழுத்தா?
என்னிடமிருக்கும் போது
எழுத்தாகவும்
உன்னிடமிருந்து வரும் போது
வார்த்தையாகவுமே
இருப்பதால் தடுமாறி போகிறேன் நான்!!!!
எத்தனை முறை கோபப்பட்டாலும்
என்னை குளிரவைக்கும்
ஒரு எழுத்து!!
இன்னும் சொல்லாத "ம்ம்ம்ம்" கள்
நிறைய....
சொல்லிவிடாதே என்கிறாய்...
"ம்ம்ம்ம்" என்ற எச்சரிக்கையோடு...
ஒதுங்காதே என் உயிரே
நீ முன் நில்,உன் மனதை
பின் தள்ளி விட்டு..
வாழ்வில் பல காயங்கள்
தொடர் கதையாய் சோகங்கள்
காயத்தின் மேல் காயங்கள்
வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் சில மனங்கள்
காலங்கள் ஓடலாம்
காயம் அது ஆறலாம்
காயம் அது ஆறிவிட்டால்
பட்ட வடு ஆறுமா?
ஆறும?
காலத்தால் முடியாததும்
இவ்வுலகில் உண்டோ
என் உயிரே.,
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்....
உன்னுடன்..
காயங்கள் உனக்கு தான்,
ஏனோவலிகள்,
வேதனைகள்
எனக்கு.............
மனிதனாக கடவுள் பிறந்ததாலோ,
சந்தேக தீயினில் வாடியதாலே,,
அவளை தீயில் குளிக்க செய்தான்.
மனித ரா, மன் னில் பிறந்து....
மனிதனை விட தாழ்ந்துவிட்டானே
மனிதன் என்ன செய்வான்...பாவம்..
இன்றும் தொடர்கதையாய்,..தொடர்கிறது,..
சீதைகளின் தீ குளியல்.......
சின்ன சின்ன ஆசை..
பொன்மாலை பொழுதில்,கடற்ககரை மணலில்
உன் கைகோர்த்து நடக்க ஆசை.
பைந்தளிர் மரநிழலில் பசும்புல்தரையில்
உன் மடிமேல் தலைவைத்து கண்மூடாமல்
உன் முகம் பார்த்து பேச,
உன் விரல்கலாள் தலைகோறி விடஆசை.
பொளர்ணமி நிலவின் வெளிச்சத்தில்
என் மார்பில் சாய்ந்து,வான் அழகை
நீ ரசிக்க,உன் அழகை நான்
ரசிக்க வேண்டும்.நிலா சோறு
நீ ஊட்ட வேண்டும்.
நிலவு அழகா?நீ அழகா
என்று நான் கவிதை
சொல்ல வேண்டும்.
மஞ்சனை நிசப்ததில்,
உன் இரவு நேர சினுங்கள்
என் காதிலினில் கேட்கவேண்டும்.
நீ அயர்ந்து உறங்கையிலே,
என் விழி மூடாது உன்னை
பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
சின்ன,சின்ன ஊடல் நீ புரியவேண்டும்
உன்ன
எங்கே துக்கம்
மிகுந்து நிம்மதி
தொலைந்து போகிறாதோ
அந்த ராத்திரியின்
மணித்துளிகள் மரணத்தை
நோக்கி உன்னை
அழைத்தபடியே
இருக்கும்!
சயனப் பண்டங்கள்
முகாரி ராகமிசைத்து
காது மடல்களுக்குள்
வண்டுகளின்
குடைச்சல் போல்
ஒப்பாரிக் குலவைகள்
ஓலமிட்டு
ஒற்றையடிப் பாதையில்
பாடையோன்று
பல்லக்கில் ஏறி
வரும்!
நீளுகின்ற மரணத்துளிகள்
ஒவ்வொன்றும்
யுகக் கடத்தலாய்!
ஆமைக்கும் முயலுக்கும்
பந்தயத்தின்
ஓட்டம் போல்
இருதயமும் கடிகாரமும்
மாறி மாறி
ஒலியெழுப்பும்!
மரணிக்க முயலும்
கடைசி நிமிடமொன்றில்
தூக்கம் கண்களின்
இமைகளைத் தழுவி
விட்டுச் செல்லும்!
அசைந்து திரும்பி
நண்பர்கள் (7)
![ப்ரியன்](https://eluthu.com/images/userthumbs/f2/ibkzh_26022.jpg)
ப்ரியன்
சென்னை
![கி கவியரசன்](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )
![குமரிப்பையன்](https://eluthu.com/images/userthumbs/f2/otauh_20966.jpg)
குமரிப்பையன்
குமரி மாவட்டம்
![manoranjan](https://eluthu.com/images/userthumbs/f1/fkyjq_16076.jpg)