அம்மாவை நினைத்து....(2) அழகிய நிலவைக் காட்டி, ***ஆர்,அதில் உள்ளார்...
அம்மாவை நினைத்து....(2)
அழகிய நிலவைக் காட்டி,
***ஆர்,அதில் உள்ளார் என்ற ,
பழங்கதை எடுத்துக் கூறிப்
***பாலுடன் கலந்து நன்கு ,
குழை,அமுது ஊட்டி னாளின்,
***குறுகியே சிறுத்த வாயில்,
பிழை,மகன் வேகா நின்ற
***பிடி,அரிசி இடுகின் றேனே! ........