எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று என்பது இன்று இல்லை... இன்று என்பது நாளை...

நேற்று என்பது 

இன்று இல்லை...
இன்று என்பது 
நாளை இல்லை ...
நாளை என்பது 
நிச்சயம் இல்லை...

நேற்று வாழ்ந்தோம் 
இன்று வாழ்கிறோம் 
நாளை.... அறியோம் !

இதுதான் வாழ்க்கையின் 
நிரந்தர கால அட்டவணை !

பிறந்தோம் இறந்தோம் 
வந்தோம் சென்றோம் 
என்று இல்லாமல் 

வாழ்ந்துக் காட்டினோம் 
வாழ்க்கையில் சாதித்தோம் 
என்பதே ,
அர்த்தமுள்ள வாழ்க்கை 
அசாதாரண வாழ்க்கை 
அவசியமான வாழ்க்கை !

நாம் மறைந்தாலும் 
நம் தடயங்கள் மறையாது 
தலைமுறை மறக்காது !

நல் விடியலாகட்டும் !

பழனி குமார்  

நாள் : 3-Sep-21, 7:08 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே