என் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

(வாழ்த்தலாம் வாங்க 07.09.2014 அன்று பிறந்த நாள் காணும் என் தோழி தாமரைக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....)

வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....

இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...

பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...

ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது...

அதனால் தான் உன்னை சுமக்கும்
என் மனதில் உனக்கான வாழ்த்தையும்
சுமந்து கொண்டு வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...

நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி மாலையில்
மறையும் சூரியனும் அல்ல...

இரவில் மட்டுமே தெரியும்
நிலவும் அல்ல..

பரந்து விரிந்த வானத்தை போல
தான் உன் மீது நான் கொண்ட அன்பு...

என்றெல்லாம் எனக்கு பொய்
சொல்ல தெரியாது...

என் உடலில் உயிர் இருக்கும் வரை
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...

தாமரை இலை மீது தண்ணீர்
எப்படி தங்குவதில்லையோ
அது போலதான் உன் மீது
எனக்கு வரும் கோபமும்
ஒரு நொடி கூட நிலைப்பதில்லை....

உன்னை பெற்றெடுத்த தாயிக்கு
பெருமையையும்...

உன்னை வளர்த்த தந்தைக்கு
வெற்றியையும்...

உடன் பிறந்த சகோதர்களான
தோழர்களுக்கு பாசத்தையும்...

உன்னால் கிடைக்க வேண்டும் என்று
இந்நாளில் உன்னை வாழ்த்துகிறேன்...

உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான்
அது உன் கள்ளம் கபடம் இல்லாத அன்பு மட்டும் தான்...

உன் வாழ்க்கையில் துன்பம்
என்னும் இருள் நீங்கி
இன்பம் என்னும் சந்தோசம்
மட்டும் உன்னில் தங்கட்டும்
என்றெல்லாம் நான் சொல்ல வில்லை...

ஏனென்றால் இவை இரண்டும் இல்லாத
வாழ்க்கை எவருக்குமில்லை...

ஆகையால் இதில் எது உன் வாழ்க்கையில்
வந்தாலும் அதை சரிபாதியாக எடுத்து கொண்டு
வாழ்க்கையை நீ ஜெயிக்க வேண்டும்....

ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு...ஆனால் அந்த
வெற்றியில் பிறரின் துன்பம் மட்டும் இருக்க கூடாது...

உன்னுடன் பழகிய நாட்களில்
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால்
உன் பிறந்த நாளான இன்று
என்னை மன்னித்துவிடு தோழியே...

எல்லா வளமும் நீ பெற்று
பல்லாண்டு நீ வாழ இந்த சங்கீதாவின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் என் செல்ல்லமே.....

(அன்புள்ள தோழிகளே தோழர்களே என் தோழியை உங்கள் மனதால் வாழ்த்துங்கள்...)

எழுதியவர் : சங்கீதாஇந்திரா (6-Sep-14, 12:59 pm)
பார்வை : 40377

மேலே