சமரசம் உருவாக முனைந்திடுக
காதலித்து மணம் புரிந்தோர்
கசப்பான சூழலில் பிரிவது
கலியுகக் காட்சிகளில் ஒன்று !
பெரியோர் முடித்த திருமணம்
சிறியதோர் நிகழ்வு சச்சரவாகி
பிரிகின்றார் நவீன காலத்தில் !
விவாகம் முடிந்த வினாடிகளில்
விவாக ரத்துக்காக அலையும்
வினோதம் நிகழும் காலமிது !
திருமணம் முடிந்த சிலகாலம்
இல்லறம் நடத்தும் தம்பதியர்
துறவறம் ஏற்பதும் இக்காலம் !
இணைந்து வாழ்பவர் பிரிந்து
தவிக்கும் பிள்ளைகளை மறந்து
திருமணம் புரிவதும் எதற்காக ?
புரியாத புதிராக புரிதலின்மை
அறியாத மனங்கள் பரிதவிப்பு
நாளும் காணும் காட்சியானது !
மணம் முடித்தோர் சிந்திக்க
முடித்து வைப்போர் கவனிக்க
காதல் மனங்கள் இணந்திருக்க
மனம்விட்டு பேசுவீர் மறவாது
பெரியோர் கலந்து உரையாடி
ஒருமித்தக் கருத்தை ஏற்றிடுக !
முறிந்திடும் மனங்கள் இணைக
விவாக ரத்துக்கள் மறைந்திடுக
சமரசம் உருவாக முனைந்திடுக !
பழனி குமார்
18.06.2023