தந்தையர் தின சிறப்பு கவிதை

இன்று *தந்தையர் தினம்* அது பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் தங்கள் *கருத்துக்களை தெரிவிக்கவும்* நண்பர்களே.....



🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தந்தையர் தி்ன*
*சிறப்பு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

அம்மாவைப் பற்றி
பேசிய அளவிற்கு
கவிதைகள்
அப்பாவைப் பற்றி
பேசவில்லை ....
அப்பாவை
கவிதைக்குள்
அடக்க முடியாது
என்பதனாலோ என்னவோ.....?

அப்பா
கசப்பு சுவை தான்
ஆனால்
கசப்பு சுவையில் தான்
ஆரோக்கியம்
இருக்கிறது என்பதை
அறிவதே இல்லை
பலரும்.....!

குடும்ப மரத்தில்
பூ காய் கனி எல்லாம்
உருவாக
காரணமாக இருந்தாலும்
எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல்
கடமையை
தவறாமல் செய்யும்
"வேர் "தான் அப்பா....

குழந்தையை மட்டும்
பத்து மாதம்
தாய்
வயிற்றில் சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
எண்ணிப் பார்த்த நாம்...
குழந்தை
மனைவி
இருவரையும் சேர்த்து
தந்தை
பத்து மாதம்
மனதில் சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
எண்ணிப் பார்க்க
மறந்து விட்டோமே...!

அம்மாவின் பாசம்
கண்ணீரில் தெரியும்....
அப்பாவின் பாசம்
வியர்வை நீரில் தான் தெரியும்...

பெரும்பாலான
மகன்களின் பார்வையில்
அப்பா
வில்லன்தான்....
ஆனால்
காலப்போக்கில்
தெரிந்து கொள்கிறார்கள் கதாநாயகன் என்றால்
கடவுள் என்று...!

அப்பா
குடும்பத்திற்காக
பட்ட கஷ்டத்ததை
அறிய வேண்டும்மென்றால்
அவருடைய
கைகளைத் திறந்து பாருங்கள்
மருத்துப்போன தோலில்
தெரியும்.....

அம்மாவின் கண்ணீரை
அனைவரும் அறிவோம்...
ஆனால்
அப்பாவின்
கண்ணீரை
உலர்த்திச் சென்ற
காற்றுக்கு மட்டுமே
அறியும்.....

குழந்தைகள் மீது
அதிக அன்பு இருந்தாலும்
அளவோடு காட்டுவார் ......
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சாகும்
என்பதை அறிந்தவரோ .....?

அப்பா...
அளந்து சொல்ல முடியாத
பிரபஞ்சம்....
எண்ணி சொல்ல முடியாத விண்மீன்கள்....
உருவம் கொடுக்க முடியாத
காற்று.....
இடம் பெயர்த்து
வைக்க முடியாத இமயம்....
பிளக்க பிளக்க வெளிப்படும் அணுவின் ஆற்றல்....

அப்பா..
படிக்க தெரிந்தவர்களுக்கு
சிறந்த நூலகம்..
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகான பூந்தோட்டம்
பழகத் தெரிநதவர்களுக்கு
பாசமுள்ள தோழன்....
சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு
அருமையான முக்கனி...
வாசிக்கத் தெரிந்தர்களுக்கு
இனிமையான புல்லாங்குழல்...
வாழத் தெரிந்தவர்களுக்கு
சிறந்த துணை....

இனி வருங்காலங்களில்
தந்தையர் தினத்தை மட்டும்
கொண்டாடாமல்
தந்தைகளையும் சேர்த்து கொண்டாடுவோம்.....!

*கவிதை ரசிகன் குமரேசன்*


🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

எழுதியவர் : கவிதை ரசிகன் (18-Jun-23, 7:03 pm)
பார்வை : 26

மேலே