ஆரம் --------
மணவாழ்க்கை அதன் வெற்றியாய்
கையில் சிரிக்கும் மழலைச் செல்வம்....
கழுத்தில் விழும் கர்வமான ஆரம்
தத்தித் தவழும் குழந்தையதின்
நடக்க முயலும் முதல் அடியே
வாகை சூடும் வடிவான ஆரம்....
பள்ளியில் படிக்கும் பிராயத்தில்
படிப்பில் வாங்கும் ஒவ்வொரு
பதக்கமும் பாராட்டுப்பெறும் ஆரம்...
பருவம் பூத்தப் பின்னே
பாவையின் இதயத்தை வென்றிடும்
காதல் அது கனிவான ஆரம்...
காதல் கனிந்து கல்யாண
உறவில் உறவாட பெண்ணின்
கழுத்தில் விழும் தாலியெனும் ஆரம்...
வாழ்க்கைச் சக்கரத்தை வலுவாய்
ஓட்டிட கணவன் மனைவி பிள்ளைகள்
என தாங்கிப் பிடிக்கும் ஆதரவான ஆரம்...
வாழ்க்கைப் பாதையில் யாவரும்
உண்மையும் திண்மையுமாய் இருந்துவிட்டால்
தேடிவந்து அலங்கரிக்கும் வெற்றியெனும் ஆரம்.
[சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை]