நீயும் சுமங்கலியாய் வாழனும்

நீ விதவை என்றும் தெரிந்தும்
வித்திட்டேன் உன் மனதில் நான்
நீ மீண்டும் விளைய வேண்டுமாய்
நீ மீண்டும் வாழ வேண்டுமாய்.

முளைத்து விடு என் மனதில் நீ.
படர்ந்து விடு என் உடலில் நீ
பதிந்து விடு என் மனதில் நீ
பரி மாறி கொள் உன் பாசத்தை நீ..

பார்போருக்கு உதாரணமாய்
பரிசம் போட்டு உன்னை நான்
பாரியாக நீ எனக்கு வர வேண்டும்
என் மனைவியாய். உன்னோடு

நான் வாழ உரிமை மட்டும்
நீ கொடுத்து உணமையாய்
வாழ்ந்து விடுவோம்.. வா
கண்ணே என்னோடு நீ..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (14-Dec-14, 10:21 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 64

மேலே