முத்துகிருஷ்ணன்கண்ணன்- கருத்துகள்
முத்துகிருஷ்ணன்கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [35]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [20]
- மலர்91 [20]
தனிமை.
இல்லறம் கடந்த துறவறம். இல், துறவு இரண்டுமே அறங்கள். மனிதனின் வெவ்வேறு காலகட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவை.
ஒரு குடம் திறமை, ஒரு படி அறிவு, இவற்றோடு ஒரு துளி அதிர்ஷ்டம்.
பெண்கள் தான்.... ஆண்கள் மகிழ்ச்சியை தருபவர்கள். பெண்கள் அதை பெறுபவர்கள். நம் சமூகம் ஒரு ஆணின் தரத்தை மதிப்பிடுவதெல்லாம், அவன் தன தாயை, மனைவியை, மகளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறான் என்பதை வைத்துதான்.
அநியாயம் நிறைந்த நியாயம். அதாவது கள்ளப்பண ஒழிப்பு, கருப்புப்பண ஒழிப்பு, என்ற உயர்ந்த நோக்கங்களோடு.....ஆனால் சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் வந்த நியாயம். நான் முன்னேற்பாடுகள் என்று சொலவ்து பாமர மக்களின் அனுதின சிரமத்தை மட்டும் கருத்தில் கொண்டு அல்ல. நல்ல பணம், கருப்பு பண முதலைகளிடம் சென்று குவிந்து விட்ட அவலத்தையும் கருத்தில் கொண்டுதான். உயர்ந்த நோக்குடன் வந்த திட்டத்தின் பலவீனமான பக்கங்கள் தெரிகின்றன. ஆனாலும் ஒரு ஆறுதல். அதிரடி சோதனையில் கிடக்கின்ற தொகையில் பெரும்பான்மை சதவீதம் பழைய நோட்டுக்கள் இருப்பதுதான். முழுமையாக மாற்ற முடியவில்லை என்பதுதான்.
இத்திட்டத்தின் முழு வெற்றி என்பது பணமில்லா பரிமாற்றம், தங்கத்தின் மீது உச்சவரம்பு, கடுமையான நில உச்சவரம்பு, நில வணிகத்தில் கருப்புப்பண ஒழிப்பு, லஞ்ச, லாவண்ய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என அடுத்தடுத்த படிகளை வெற்றிகரமாக கடக்கும் போதுதான் நமக்குத் தெரிய வரும்.
மற.
தமிழ் சமூகத்தில் சாதிகள் இருந்ததாக சான்றுகள் இல்லை. ஆனால் சங்க இலக்கியங்கள் மூலம் அறிவது, குலங்கள் இருந்திருக்கின்றன.அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் குலங்கள் பெயரிடப்பட்டிருக்கின்றன.வேளாளர்,தச்சர்,பொற்கொல்லர்,வண்ணார்,மருத்துவர்,சாணார்,கொல்லர், என இன்னும் பலப்பல குலங்கள் இருந்திருக்கின்றன.தாங்கள் வாழ்ந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்றவாறும், மேற்கொண்ட தொழில்களுக்கு ஏற்றவாறும் குளங்களின் பெயர்களும், அவற்றின் பெருமைகளும் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. முக்கியமாக, இவற்றுக்குள் ஏற்ற தாழ்வுகள் இருந்திருக்கவில்லை. பின்னர் வந்த ஆரியத் தாக்கம்தான், குலங்களை சாதிகள் எனக் கூறி, அவற்றிடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி, என்றுமே தீர்க்க முடியாத சாதி மோதல்களுக்கு வழி திறந்து விட்டன. சாதி இனி ஒழியாது. ஆனால் மீண்டும் அந்தந்த குலங்களுக்கான பெருமையை மீட்டெடுப்பதன் மூலமும், சக மனிதனுக்குள் வேற்றுமை பாராட்டாமல் வாழ்வதின் மூலமும் சமத்துவம் மலர முடியும்.
வியங்கோள் வினைமுற்று.
நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்? உங்கள் கேள்வி நகைச்சுவைக்காக கேட்கப்பட்டது இல்லையே?
சத்தியமாக மனிதன்தான் இந்த இழிநிலைக்கு காரணம்.
மதம் என்பது மனிதர்களை நல்வழிப் படுத்த ஏற்பட்ட மார்க்கம்.
உலகின் எந்த மதமும் மனிதனை இழிவு படுத்தவில்லை.
இடையில் மதங்களை வைத்து மனித மனங்களை மதம் பிடிக்க வைத்த சில மனிதமிருகங்களின் செயலால் வந்த விளைவுதான் இத்தகைய இழிநிலைக்கு காரணம்.
சந்தேகமே இல்லாமல் ஒரு குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட பகிர்வின் மூலமாகத்தான் பரவி இருக்கும். மனிதனும் ஒரு வகை விலங்காக வாழ்ந்த காலத்தில், குடும்ப அமைப்பு என்று ஏற்படாத காலத்தில், இன்று வரை தொடரும் விலங்கின உறவுகள்தான் மனிதனுக்கும் சாத்தியமாயிருக்க முடியும்.
முதல் தவறு வரதட்சிணை கேட்கும் குடும்பத்துடையது. கவனிக்கவும் . அந்த குடும்பத்தில் பெண்களும் இருக்கிறார்கள். மாமியார்களாய்,நாத்தனார்களாய்,இன்னும் பல உறவுகளாய்.
இரண்டாவது தவறு, தன பெண்ணுக்கு வரன் பார்க்கும்போது ஒரு நல்ல, கண்ணியமான,உழைப்பில் நம்பிக்கை கொண்ட,தன்னம்பிக்கை மிக்க,......என்று தேடாமல்..... அழகான,பணவசதி படைத்த,அதிக சொத்துக்கள் உள்ள ..... என்று தேடி தன பெண்ணின் மேல் பணம் காட்டுகின்ற பெண்ணின் குடுமபத்துடையது. கவனிக்கவும் அங்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
மூன்றாவது தவறு, இதையெல்லாம் மௌனமாய் அனுமதித்து வழக்கமாய் மாற்றி விடும் சமூகத்துடையது. கவனிக்கவும் இங்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
இதில் ஆண், பெண் என்பதெல்லாம் வேற்று வாதம்.
குடும்பம் தலையிடாத, ஆணும்,பெண்ணும், மட்டுமே சம்பந்தப்பட்ட காதல் திருமணங்களில் இந்த தவறின் வாய்ப்புகள் குறைவு.
திருமணம் என்பதே பெண்களின் சுயத்தை அழிக்கின்றது என்ற புள்ளியிலிருந்து நீங்களும், திருமணமும்,குடும்பமுமே பெண்ணின் உண்மையான விலாசம் என்ற புள்ளியிலிருந்து நானும் பயணப்பட்டு, நல்லதொரு ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் பெண்ணின் சுயத்தை போற்றுகின்ற குடும்ப அமைப்புதான் அவளின் முழுமையான விலாசம் என்ற ஒரே புள்ளியில் வந்து சேர்ந்தமைக்கு நன்றிகள்.
அது ஒரே ஒரு உறவுக்காக....அல்ல தோழரே. ஒரு பழத்திற்குள் விதைகளின் வடிவில் ஒரு தோப்பே இருப்பது போல் ஒரு தலைமுறைக்கான உறவு. ஒரு தலைமுறையை உருவாக்க வந்தவளின் அதிகபட்ச எதிர்பார்ப்பு அன்பு மட்டுமே. கலப்படமில்லாத அவளுக்கான அன்பு.
"ஈஷா என்பது ஒரு நிறுவனம் ... அந்த நிறுவனம் லட்சங்களை எதிர்பார்ப்பது தவறு இல்லை" ...தவறு நண்பரே. இந்த மனப்போக்குத்தான் அவர்கள் தவறு செய்ய இடமளிக்கிறது. நாம் ஏமாந்து போக வாய்ப்பளிக்கிறது.இலட்சங்கள் சம்பாதிக்க நிதி நிறுவனம் நடத்தட்டும். வியாபாரம் செய்யட்டும்.ஆன்மிகம் என்பது மக்களை மேம்படுத்த...அவர்கள் சிந்தனையை வளப்படுத்த...மனித சமூகத்தை சீர்படுத்த...என மிகப்பெரிய நோக்கங்களைக் கொண்டது. தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் தங்களுக்கு தெரிந்த சிற்சில சிதது வேலைகளை வைத்துக் கொண்டு, மக்களின் சிந்தனை தெளிவற்ற நிலையை பயன்படுத்தி, மூளை சலவை செய்வதை அனுமதிப்பது நம் அரசுகள் செய்யும் மிகப்பெரிய முட்டாள்தனம். வள்ளலாரும், ராமகிருஷ்ணரும், அரவிந்தரும், இன்னும் எத்தனையோ மகான்கள் உலாவிய இந்த பூமி இவர்களை போன்ற அறிவுத் திருடர்களிடம் சிக்கி கொண்ட அவலம்தான் சகிக்க முடியாதது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
ஒரு உண்மையான ஞானிக்கும், இலட்சங்களுக்கும் தொடர்பில்லை.
அப்படி இருந்தால் அந்த ஞானம் உண்மையில்லை.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத நாம், அவர்களின் செய்கையை ஆராய்ய்வது பொருளில்லாதது.
தவறு செய்ய நாமே வழி செய்து கொடுத்து விட்டு, அவர்களை குற்றம் சொல்வது சரியாகாது. முதலில் நாம் திருந்த வேண்டும்.
1. கண்டிப்பாக இல்லை. தன்னை பெற்றவர்கள் இறக்கும் போது பிள்ளைகள் வழியனுப்புவதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு கவுரவம். இது ஒரு சமூக கோட்பாடு. இதில் நம்பிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.
2. சூழ்நிலைகளின் அவலம்.
3. பாவங்களுக்காக உண்டியலில் பணம் போடுவது போல் தெரியவில்லை. அப்படிப் போட்டால் கோயிலுண்டியல்கள் அனைத்தும் நிரம்பி வழிய வேண்டும்.
4. இயலாதவனின் ஆயுதம் இளித்தவாய்த்தனம்..
5. இது ஒருவகை அறிவுக் குறைபாடு.
6. கண்டிப்பாக உள்ளது. ஒன்று சமூகத்திற்கு நாம் காண்பிக்கிற முகம். மற்றொன்று நமக்கு மட்டுமே தெரியும் உண்மையான முகம். இப்படி இருப்பது நன்மையே.
ஆணாகத்தான். அதுவும் என் தாய்க்கே மகனாகத்தான். இந்த பிறவியில்லை இன்னும் ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் அந்த ஜீவனுக்கு நான் செய்து முடிக்க முடியாத கடமைகளும்,நன்றிகளும் எவ்வளவோ உள்ளன.
எனது பதிலின் இரண்டாம் பாகம் அதுதானே.
........வசதி இருந்தாலும், தன உலகை அடுப்படியிலும், படுக்கையையிலும் அடக்கி விடாமல், சமூக வெளிகளை அறிய, அறிவையும்,மனசையும் விசாலமாய் வைத்துக் கொள்ள பெண்கள் வேலைக்கு செல்வது சிறந்ததே.
பெற்றோரை வணங்குவோம்.
பிறந்தோரை போற்றுவோம்.
மனைவியை மதிப்போம்.
பிள்ளைகளை புரிந்துகொள்வோம்.
நண்பர்களை நேசிப்போம்.
பிழைப்புக்கு சம்பாதிப்போம்.
பிழை செய்ய தாமதிப்போம்.
கவலைகளை மென்றிடுவோம்.
காலத்தை வென்றிடுவோம்.
மண்ணுக்குள் செல்லும் காலம் வரை
மனிதனாய் வாழ முயன்றிடுவோம்.