கானல் நீராய் .... ---------------------- அன்றொரு நாள் மனிதம்...
கானல் நீராய் ....
----------------------
அன்றொரு நாள் மனிதம் தழைக்க
பெண்மை இருந்தது ஆணிவேராய்
இன்றோ புல்லர் அதன் சிறப்பழிக்க
பெண்ணியம் போனது கானல் நீராய்
அன்று
புலிவிரட்ட முறமெடுத்த வீரம்தான் பெண்மை !
'வரப்புயர' சொல்லித்தந்த ஞானம்தான் பெண்மை !
அகிலத்துக்கு அன்பு ஊட்டிய தாய்மைதான் பெண்மை !
அனைவருக்கும் உயிரூட்டிய தாயும் தான் பெண்மை !
உலகுக்காய் உயிர்துடிக்கும் உன்னதம்தான் பெண்மை !
பெண்மை இன்றி இல்லை இப்புவியில் ஆண்மை !
இன்றோ
போட்டிழந்தால் வீட்டுக்குள்ளே விதவையாய்....
தட்டிக்கேட்ட்டால் வீதிநடுவே வேசியாய் ....
பூனை நடையில் மேடைதனிலே அழகியாய் ....
புல்லர் கொள்ளவே கற்பைச் சுமந்த கருவியாய் ...
என்றும் .
ஊரும் உலகும் உற்றமும் சுற்றமும்
ஊனோடும் உயிரோடும் வாழக் காரணி பெண்மையே !
அதன் சீரும் சிறப்பும் கருத்தும் கனவும்
கானல் நீராய் போனதுதான் உண்மை ! உண்மையே !
மாமுகி.