எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீட்டு....
--------------

கருவிலே உருவாகிக்
கண்ணியமாய்ப் பூமிவந்து
செந்த்நீரைப் பாலாக்கி
சிங்காரமாய் வளர்ந்தவன்......

பாலாடை மேல்விலக்கி
பசித்த நிலை தான் தீர்த்து
மோகங் கொண்டு
மேவி விரப தாபந்தீர்த்து....

வேட்கையைத் தானடக்கி
வேண்டியதை தனுண்டு
வேதனையும் அறிந்திடாமல்
மேலெழுந்து சென்றிட்டே.....

வலியிலே அவள்துடிக்க
வாந்தியும் எடுத்துக்கொள்ள
சொரிந்திடும் உதிரந்தன்னில்
நொடிந்தவள் சோர்ந்துகொள்ள.....

தீண்டொணா பாதகமாம்
தீட்டென்று ஒதுக்கிக்கொள்ள
பூட்டிய விலங்குதனைப்
போர்க்கணை நீதொடுத்து....

மீண்டெழுந்த காலம் வென்றே
புதுமைகள் கண்டுகொண்டோம்
காமுகர் வலைதனிலே
காதலின் நளினம் புகுந்து.....

நாடகங்கள் அரங்கேறும்
நாழிகையும் மயங்கிடாதே
தீட்டெதுவெனில்
தீயதை நெஞ்சிற்கொண்டு....

நஞ்சினை வஞ்சங் கொண்டு
நாவிலே தேறல் சொட்டப்
பேசுவோர் வார்த்தை தாமே......

பிரிகரன்

மேலும்

மேலும்...

மேலே