எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அசலே ! உங்களுக்கு இந்த நகல்களின் அன்பு வணக்கம்...

அசலே ! உங்களுக்கு இந்த
நகல்களின் அன்பு வணக்கம் !
ஒப்பிலா சூரியன் நீங்கள் !
உங்களிடம் வெப்பம் வாங்கி
ஒளிரத் துடிக்கும் நிலவுகள்
நாங்கள் வாழ்த்தி அளிக்கும்
      வாழ்த்து மடல்
கொங்கு மண்ணிலே மங்கா புகழுடன்
தங்களுக்கென தனி வழி அமைத்திட்ட
தங்கம் நிகர் எங்கள் தலைவரே !
வார்ப்பட உலகின் வரலாறு எழுதினால்
திருப்பும் பக்கமெல்லாம் உங்களின்
திருநாமம் வீற்றிருக்கும் !
மறுசுழற்சிக் கலையாலே மணல் துகளின்
அற்ப ஆயுளையும் அதிசயமாய்
பன்மடங்கு உயர்த்தி விட்ட
மணலின் மருத்துவர் நீங்கள் !
உங்களின் கைகளில்தான்
விருதுகள் மதிப்புறுகின்றன !
உங்களின் தோள்களில்தான்
மாலைகள் மலைப்புறுகின்றன !
உங்களின் மீது மட்டும்தான்
பொன்னாடையும் பொலிவுறுகின்றது !
தோழமை விருதுபெறும் நீங்கள்
காலகாலமாய் வாழ்வாங்கு வாழ்வென
வாழ்த்தும் வயதில்லை எனினும்
வாழ்த்தி வணங்குகிறோம் !

நாள் : 11-Feb-24, 3:45 pm

மேலே